Wednesday, April 18, 2012

எச்சரிக்கை! புதுவிதமான 'கடனட்டை' (Credit Card)மோசடி

"விசா காட்”, “மாஸ்ரர் காட்வைத்திருக்கும் வாடிக்கையாளர்களே! புதுவிதமான கடன் அட்டை மோசடியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் ஏமார்ந்து விடாது எச்சரி க்கையாக இருங் கள் என றோயல் வங்கி அறிவித்துள்ளது.
உங்களது கடன் அட்டைகளில் உள்ள விபரங்கள் அனைத்தையும் எப்படியோ தெரிந்து வைத்துக் கொண்டுள்ள மோசடிக்காரார்கள் அதன் பின்புறத்திலுள்ள இலக்கங்களில் இறுதி 3 எண்களா ன பாதுகாப்பு இலக்கங்களையும் அறிந்து கொண்டால் தான் உங்கள் கடன் அட்டை மூலம் அவ ர்கள் பணமோசடி செய்ய முடியும். தொலை பேசி மூலம் உங் கள் பெயர் விபரங்களையும், உங்க ள் கடன் அட்டையின் பின்புறத்திலுள்ள இந்த இலக்கங் களையும் சந்தைப் படுத்தும் கொம்பனிகளிடம் வழங்குவதன் மூலம் அவர்கள் பொருட்க ளை கொள்வனவு செய்ய முடியும்.

இந்த இலக்கங்களை உங்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதற்கு அவர்கள் தந்திரமான முறை யினை மேற்கொண்டு வருகின்றனர். உங்களை தொலை பேசி மூலம் அழைத்து ஏதாவது ஒரு பெயரைக் கூறி தன்னை அறிமுகம் செய்து கொண்டு விசாகாட் மோசடி விசாரணைப் பிரிவில் இருந்து அழைக்கிறேன். எனது அடையாள எண் 12460. உங்களதுவிசா காட்டினைப் பயன் படுத்தி (விசா காட்டினை வழங்கிய வங்கியின் பெயரையும் குறிப்பிட்டு) பொருள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அதில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுபற்றி தெரிந்து கொள்வதற்கா கவே அழைக்கின்றோம். நீங்கள் அரிசோனாவி லுள்ள ஒரு சந்தைப்படுத்தும் கொம்பனியில் இருந்து உங்களது விசா காட்டினைப் பயன்படுத்தி 497. 99 டொலருக்கு ரெலி மார்க்கெட்டிங்பிரச் சார தொல்லையை தவிர்ப்பதற்கான கருவி ஒன்றினை கொள்வனவு செய்தீர்களா? எனக் கேட்பார்கள்.
நீங்கள் இல்லையெனப் பதில் அளித்தால், அண்மைக் காலமாக சிலர் இத்தகைய மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 297.00 முதல் 497.00 டொலர்கள் வரை கொள்வனவு செய்து வருகின்றனர். அவர்கள் உங்களது விசா காட்டினைப் பயன்படுத்தி 497.00 டொலர்களுக்கு கொள்வனவு செய்துள்ளனர். அத்தொகையினை நாம் உங்களது அடுத்த மாத வங்கி அறிக்கைக்கு முன்னர் உங்களுக்கு திரும்பத் தருவோம். உங்களது முகவரி இது தானே எனக் கேட்டு முகவரியை கூறி அது சரி தானா எனக் கேட்பார்கள்.
நீங்கள் ஆம் என்று சொன்னதும் நீங்கள் தான் இந்தக் கடன் அட்டையின் உரிமையாளர் என்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். உங்கள் கடன் அட்டையின் பின்புறத்திலுள்ள இலக்கங்களின் இறுதி மூன்று எண்களையும் கூறுவீர்களா எனக் கேட்பார். அதனை உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டதும் நன்றி, நாங்கள் விசாரணையை தொடர்வோம். நீங்கள் வேறு ஏதாவது கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? நீங்கள் ஏதாவது கேள்வி கேட்க விரும்பினால் உங்களது கட ன் அட்டையின் பின்புறத்திலுள்ள தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொண்டு கேட்கலாம் எனக் கூறுவார்;. அப்போது இந்த அடையாள இலக்கங்களைக் கூறுங்கள் என 6 எண்களைக் கொண்ட இலக்கமொன்றினையும் தருவார்.
உங்களிடம் இருந்து அந்த 3 எண்களையும் பெற்றுக் கொண்ட 15 நிமிட நேரத்தினுள் அவர்கள் உங்கள் கடன் அட்டையினைப் பயன்படுத்தி பொருட்களை கொள்வனவு செய்து விடுவார்கள். எனவே எச்சரிக்கையாக இருங்கள். யாராவது இவ்வாறு உங்களுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு எதுவித விபரங்களையும் வழங்காது, கடன் அட்டையின் பின்புறத்திலு ள்ள தொலை பேசி இலக்கத்தில் நான் தொடர்பு கொள்கிறேன் எனக் கூறி தொலைபேசி தொடர்பினை துண்டித்து விடுங்கள். இந்த மோசடி பற்றி உங்கள் நண்பர்களிடமும் எடுத்துக் கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுங்கள்.
Source: http://www.ekuruvi.com/VISA%20and%20%20MASTERCARD%20SCAM

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator