Thursday, April 19, 2012

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கு ரூ.82.51 மில்லியன் நிக்கொட் ஒதுக்கீடு


 இந்த நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் "நிக்கொட்' திட்டப் பிரதிப் பணிப்பாளருமான எம்.கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திக்கென "நிக்கொட்'டினால் இந்த வருடம் 82.51 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள வவுனியா, வவுனியா தெற்கு, செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் மருத்துவ வசதிகள் கல்வி அபிவிருத்தி, வீதிப் புனரமைப்பு, ஆசிரியர் விடுதிகள், பொது நோக்கு மண்டபங்கள், பலநோக்கு கூட்டுறவு கட்டடங்கள் என்பனவற்றின் புனரமைப்புப் பணிகள் இடம்பெற்று வருவதாக வவுனியா மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளரும் "நிக்கொட்' திட்டப் பிரதிப் பணிப்பாளருமான எம்.கிருபாசுதன் தெரிவித்துள்ளார்.
 
அதன் அடிப்படையில் விவசாய அபிவிருத்தி நடவடிக்கைக்கென ஒரு மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நெடுங்கேணி, கனகராயன்குளம் ஆகிய பகுதிகளில் விவசாயத் திணைக்களங்களுக்கான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.
 
வீதி அபிவிருத்திக்கென 2.636 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சுமார் 225 கி.மீ. நீளமான வைரவபுளியங்குளம் வீதி செப்பனிடப்பட்டுள்ளது.
கல்வி அபிவிருத்திக்கென 17.727 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நெடுங்கேணி, சேமமடு சண்முகானந்தா வித்தியாலயம், வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலயம் ஆகியவற்றுக்கான ஆசிரியர் விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
 
கைத்தொழில் விருத்திக்கென 11.102 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வவுனியா மாவட்டத்திலுள்ள நான்கு பிரதேச செயலகங்களுக்குமான உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதோடு, கண்ணாடி பொது நோக்கு மண்டபம், பட்டிக்குடியிருப்பு பொது நோக்கு மண்டபம், ஓமந்தை பொதுநோக்கு மண்டபம், வேலங்குளம் பொது நோக்கு மண்டபம், ஈரற்பெரியகுளம் பொதுநோக்கு மண்டபம் என்பன புனரமைக்கப்பட்டுள்ளன.
 
அத்தோடு கிராமிய அபிவிருத்தி நிலையத்துக்கான அலுவலக உபகரணங்களும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. சுகாதார அபிவிருத்திக்கென 27.630 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 5.330 மில்லியன் ரூபா செலவில் வவுனியா பொது வைத்தியசாலைக்கான "லிப்ற்' பொருத்தும் வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
 
புளியங்குளம் பொதுச் சுகாதார அதிகாரி அலுவலகம், விடுதிகள், தண்ணீர் தாங்கி அமைத்தல் என்பனவும் இடம்பெற்று வருகின்றன. அத்தோடு இந்த நிதியின் மூலம் வவுனியா பொது வைத்தியசாலைக்கு "ஸ்கானர்' வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
நீர்ப்பாசன விருத்திக்கென ஒதுக்கப்பட்ட 16.165 மில்லியன் ரூபாவில் கனகராயன்குளம் தொழில்நுட்ப அலுவலர்கள், மேற்பார்வை உத்தியோகத்தர்களுக்கான விடுதிகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்தோடு பூவரசங்குளத்திலுள்ள ஆனந்தபுளியங்குளம் நீர்த்தாங்கியின் புனரமைப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
சமூக கிராமிய அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்டுள்ள 6.25 மில்லியன் ரூபாவில் பன்றிக்கெய்தகுளம் அசதபிற்றிய ஆகியபகுதிகளில் கிராமிய அபிவிருத்தி அலுவலகங்கள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், செட்டிக்குளம் பொது மண்டபம், பெரியகுளம் பொதுமண்டபம், கந்தசாமி நகர் பொது மண்டபம் என்பன அமைக்கப்பட்டுள்ளன எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Source: http://184.107.230.170/~onlineut/News_More.php?id=29231991319664723
 

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator