Thursday, April 19, 2012

ஜனாதிபதியின் தீர்க்கதரிசனத்தால் நாடு துரித அபிவிருத்தி கண்டு வருகிறதாம்; றிசாத் பதியுதீன் புகழ்மாலை


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தீர்க்கதரிசனமான செயற்பாட்டால் நாடு துரித அபிவிருத்தி கண்டுவருவதாக கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது ஆனால் இலங்கையில் இடம்பெற்ற கொடிய பயங்கரவாதத்தினால் 30 ஆண்டுகள் எங்களால் சுதந்திரத்தை  அனுபவிக்க முடியாது போனது எனினும் ஜனாதிபதியின் தூரநோக்கு சிந்தனையால் இன்று பயங்கரவாதம் முற்று முழுதாக இலங்கையிலிருந்து இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.


நான் வன்னியில் பிறந்தவனாக இருந்த போதும் 20 ஆண்டுகள் வன்னி மண்ணில் காலடி எடுத்து வைக்கமுடியாத நிலமையே காணப்பட்டது.ஆனால் தற்போது அவ்வாறான நிலமை காணப்படவில்லை நாட்டு மக்கள் அனைவரும் எந்தப் பகுதிக்கும் எவரும் சென்றுவரக்கூடிய நிலமை காணப்படுகிறது
வடக்குக் கிழக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மீ்ள்குடியேற்ற பணிகள்,கண்ணவெடி அகற்றும் பணிகள். வடக்கையும் தெற்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டும் துரிதமாக இடம் பெற்று வருகின்றன.
இவைகள் எல்லாம் மக்களின் பாதுகாப்பான நல்வாழ்வுக்காகவும் அரசாங்கத்தால் முன்னேடுக்கப்பட்டு வரும் திட்டங்களாகும்.இந்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்டடுவரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் சில சக்திகள் செயற்பட்டுவருகின்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 30 வருட யுத்தத்தால் அழிந்து போனதை ஒரே நாளிலோ அல்லது ஒரு மாதத்திலோ கட்டியெழுப்புவது சாத்தியமானது ஆனால் எமது ஜனாதிபதியின் தூரநோக்குச் சிந்தனையால் பல்வேறு அபிவிருத்தி திடங்களை செய்து காட்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator