Thursday, April 19, 2012

இலங்கைப் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவே உள்ளது! ஆசி.அபி.வங்கி

இலங்கைப் பொருளாதாரம் இன்னும் உறுதியாகவே உள்ளது! ஆசி.அபி.வங்கி news
இலங்கைப் பொருளாதாரம் மிதமான நிலையில் ஆனால், இன்னும் உறுதியாகவே உள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.  கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஆசிய அபிருத்திக்கான கண்ணோட்டம் என்ற அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இலங்கை கடந்த ஆண்டில், எட்டுப் புள்ளி மூன்று சதவீதம் என்ற உயர் பொருளாதார வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. இது, இந்த ஆண்டில் ஏழு சதவீதம் என வீழ்ச்சி காணும். எனினும், வருகின்ற ஆண்டுகளில் எட்டு சதவீதம் என்ற அளவிற்கு முன்னேற வாய்ப்புள்ளது. குறிப்பாக, உலக பொருளாதாரம் ஒரு நல்ல நிலையினை அடைகின்ற போது, இலங்கையில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி உயர்வடையும் என ஆசிய அபிவிருத்தி வங்கி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டில், ஆறு புள்ளி ஏழு சதவீதம் எனக் காணப்பட்ட இலங்கையின் ஆண்டுச் சராசரிப் பணவீக்கம், இந்த ஆண்டில்  எட்டு சதவீதமாக மேலும் உயர்வடையும். எனினும் இது, வருகின்ற ஆண்டில் ஏழு சதவீதமாக வீழ்ச்சி காணும்.
 
இருந்த போதும், உயர் வருமான ஏற்றத் தாழ்வுகள் மற்றும் வறுமைக் குறைப்பு, இயற்கை வளங்களின் பிரயோகம் போன்றவை தொடர்பாக பெரும் சவால்களை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் கொள்கை வகுப்போர் உள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.   
 
இதேவேளை, இலங்கையின் வீதி அபிவிருத்தி செயற்திட்டங்களிற்கு பாரியளவில் உதவி வரும் ஆசிய அபிவிருத்தி வங்கி, கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கான கடுகதிப் பாதை அமைப்பு வேலைகளில் பெரும் பங்காற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 
 
(என்.சிவரூபன்)
 

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator