வடக்கு கிழக்கு, பிரதேசங்களில் 90 வீதமான பகுதிகளில்
கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம்
தெரிவித்துள்ளது.
மேலும் கண்ணிவெடி அகற்றும்
உபகரணங்களில் மாற்றம் கொண்டுவரும் பட்சத்தில் விரைவில் ஏனைய பகுதிகளிலும்
கண்ணிவெடிகள் அகற்றப்படும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
தற்போது சர்வதேச அமைப்புக்களுடன்
இலங்கையின் அமைப்புக்கள் சிலவும் இணைந்து வடக்கு கிழக்கில் கண்ணிவெடி
அகற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றதாகவும்,
குறிப்பிட்ட சில
பிரதேசங்களில்,அதிகரித்து காணப்படும் பற்றைக்காடுகள் கண்ணிவெடிகள்
அகற்றுவதற்கு தடையாக உள்ளதாகவும், இதனால் கண்ணிவெடிகள் அகற்றும் பணிகளில்
தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முற்றாக இப்பிரதேசங்களில்
கண்ணிவெடிகள் அகற்றப்பட்டவுடன் மக்கள் கண்ணிவெடிகள்
மீள்குடியேற்றம் செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment