Friday, April 13, 2012

கரைவலை தொழில் செய்யும் பகுதிகளில் கட்டுவலை தொழிலை தடைசெய்யுமாறு வேண்டுகோள்

 (எஸ்.ஜெனி)

மன்னார் கடற்கரை பகுதியில் கரவலை மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்கள், கட்டுவலைத் தொழிலில் ஈடுபட்டுவரும் மீனவர்களினால் பெரிதும் பாதிக்கப்படுவதாக  கரைவலை  மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


கட்டுவலைத் தொழிலானது தென்கடல் பகுதியில் மேற்கொள்ளுவதற்கு அனுமதியில்லை. இது குறித்து கஇரவலை தொழில் செய்யும் பகுதியில் உள்ள அனைத்துக் கட்டுவலைகளையும் அகற்றுமாறு சகல சங்கங்களுக்கும் கடந்த 26.08.2011 இல் அதிகாரபூர்வமான கடிதத்தின் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டிருந்தது.

எந்த ஒரு வலைத்தொழிலும் 24 மணித்தியாலயத்தினுள் கடலில் இருந்து அகற்றப்பட வேண்டும்.

ஆனால் குறித்த கட்டுவலைத் தொழிலில் ஈடுபடுத்தப்படும் வலைத் தொகுதிகள் சுமார் 30 தொடக்கம் 40 நாட்கள் வரை கடலில் நிறுத்தி வைக்கப்படுகின்றது.

இவ் வலைகளை நிறுத்தி வைப்பதற்காக 90 தொடக்கம் 100 வரையிலான கம்புகளும் கம்பிகளும் பயன்படுத்தப்பட்டு நிலத்தில் ஊன்றி வைக்கப்படுகின்றன. இதனால் கடலில் உள்ள பவளப்பாறைகளும் உடைக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
இத்தொழில் சேற்றுநிலத்தில் மட்டும் செய்வதற்கு உகந்தது.

ஆனால் இத்தொழில் தென்கடல் பகுதியில் செய்வதற்கு அனுமதி இல்லை. கரைவலைத் தொழில் இலங்கை முழுதும் பிரதான தொழிலாக அமைந்துள்ளது. ஒரு கஇரவலைத் தொழிலில் 20 தொடக்கம் 30 வரையிலான தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.

தற்போது குறித்த கரைவலைத் தொழிலை மேற்கொள்ளுவதற்கு மிகவும் கடினமாக உள்ளது. இதற்குக் காரணம் கரைவலை தொழில் செய்யும் இடங்களில் கட்டுவலை கட்டுவதேயாகும்.

எனவே, கரைவலை செய்யும் பகுதிகளில் கட்டுவலை மீன்பிடித் தொழிலை தடை செய்யுமாறு மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன
Source: http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-13-48/39241-2012-04-11-08-09-24.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator