

(ரொமேஸ் மதுசங்க)
முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த நெல்லை விற்பனை செய்வதில் பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றனர்.
குறித்த மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நெல் விற்பனையாளர்கள், மேற்படி விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முற்படுவதால் அவர்கள் அந்த நெல்லை அரச நெல் கொள்வனவு மத்திய நிலையங்களில் விற்பனை செய்ய முயல்கின்றனர்.
இருப்பினும், மேற்படி அரச நெல் கொள்வனவு மத்திய நிலையங்களில் குறிப்பிட்டளவு நெல் மாத்திரமே கொள்வனவு செய்யப்படுவதாலும் கொள்வனவு செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்தும் வசதிகள் அந்த மத்திய நிலையங்களில் போதியளவில் காணப்படாதமையினாலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் இம்முறை 12,192 ஹெக்டெயார் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்பட்டுள்ளது. இவ்விவசாய நிலங்களிலிருந்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை களஞ்சியப்படுத்துவதற்காக அரச நெல் கொள்வனவு மத்திய நிலையங்களால் முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டகச்சி, தண்ணிமுரிப்பு போன்ற பிரதேசங்களில் நெல் களஞ்சியசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் மேற்படி களஞ்சியசாலைகளின் கொள்ளளவு குறைவாகக் காணப்படுவதால் விவசாயிகள் பலர் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.


No comments:
Post a Comment