Thursday, April 5, 2012

யாழ்ப்பாணத்தில் எதிர்காலத்தில் நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும்: கிறிஸ்ரோபர் கோகே


(கவிசுகி)

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்குரிய சிறந்த திட்டங்கள் எதுவும் இல்லாதிருப்பது எதிர்காலத்தில் நீர்வளம் அழிக்கப்பட்டு நீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலையை உருவாக்கிவிடும் என்று அமெரிக்க தூதரக அலுவலரும் சூழலியலாளருமான கிறிஸ்ரோபர் கோகே தெரிவித்துள்ளார்.

யாழ். சமூக செயற்பாட்டு மையத்திலுள்ள அமெரிக்க தகவல் கூடத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க உள்ளூர் அளவில் நடவடிக்கை எடுக்க 'உலகத்தை அணிதிரட்டுவோம்' என்ற தொனிப்பொருளில் கலந்தாய்வரங்கு ஒன்று இன்று புதன்கிழமை நடைபெற்றுள்ளது

இக்கலந்தாய்வரங்கின்போது பொது விரிவுரையை கிறிஸ்ரோபர் கோகே ஆற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'யாழ்ப்பாணத்தில் சிறந்த அழகான கடற்கரைகள் இருக்கின்றன. இந்த கடற்கரைகளில் கழிவுப் பொருட்களை அகற்றி பாதுகாக்க வேண்டும். யாழ்ப்பாணத்தின் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதன் மூலம் நீண்ட காலத்திற்கு எமக்கு ஏற்படக் கூடிய  பொருளாதாரப் பிரச்சனைகளை தடுக்க முடியும்

இலங்கையில் காடுகள் அழித்தல் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்தப் பிரச்சனை கட்டுப்படுத்த முடியாது தொடர்ந்து நீடித்து வருகிறது.  இலங்கையின் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் ஊடாக உல்லாசத் துறையை மேம்படுத்த முடியும்

எமது சூழலைப் பாதுகாப்பாக வைத்திருந்தால் எதிர்காலத்தில் எமக்கு இயற்கையால் எந்தப் பிரச்சனையும் வராது வரமுடியாது' என்றார்.
Source: http://www.tamilmirror.lk/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator