Thursday, April 5, 2012

வடமாகாண முஸ்லிம்கள் பற்றி கூறப்பட்டுள்ள பரிந்துரைகளை நடை முறைப்படுத்த வேண்டும் : றிசாத்

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வடமாகாண முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு குறித்து 8 இடங்களில் குறிப்பிடப்படடுள்ளதாகவும், அதனை அரசாங்கம் நடை முறைப்படுத்த வேண்டும் என்பதை தமது கட்சி வலியுறுத்தவுள்ளதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முஸ்லிம்களின மீள்குடியேற்றம் தாமதமடைவதாகவும் இதனால் பல பிரச்சினைகளை இம்மக்கள் எதிர் கொள்வது குறித்து அமைச்சரிடம் வீரகேசரியின் இணையத்தளம் கேட்ட போது அமைச்சர் றிசாத் மேற்கண்டவாறு கூறினார்.

தற்போது ஏற்பட்டுள்ள சமாதான சூழலில் வட மாகாணத்தில் இருந்து இடம் பெயர்க்கப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் இடம் பெறுகின்றது சுமார் 70 சதவீதமானவர்கள் மீள்குடியேற தமது பதிவுகளை உரிய பிரதேச செயலகங்களுக்கு சமர்ப்பித்துள்ளனர்.இருந்த போது அவர்களுக்கான இருப்பிட அமைவிடங்கள் ஏற்படுத்துவது தொடர்பில் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் பழைய புதிய அகதிகள் என்று பிரித்து அனுகப்படுவதன் மூலமும்,முஸ்லிம்கள் மத்தியில் நம்பிக்கையீனங்களை அதிகரித்துள்ளன.

இந் நிலை மாற்றப்படுவதோடு,நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரையில் கூறியுள்ள வடமாகாண முஸ்லிம்கள் பற்றி பரிந்துரைகளை நடை முறைப்படுத்த வேண்டும் என்ற அழுதத்தை நாம் தெடரந்து கொடுக்க தீர்மானித்துள்ளோம் என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.
___
Source:www.mannarwin.com

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator