Sunday, April 8, 2012

பாதுகாப்புக் கடமையில் இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் துக்கிட்டு தற்கொலை.

பாதுகாப்புக் கடமையில் நின்றுகொண்டு இருந்த சிறிலங்கா படைச் சிப்பாய் ஒருவர் அருகில் இருந்த மரம் ஒன்றில் துக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஒன்று நேற்று இரவு கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேற்படிச் சிப்பாயினது சடலம் இன்று காலை மரத்திலிலுள்ள கொப்பு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் உள்ள படை முகாம் ஒன்றில் 7 பற்றாலியன் படைப்பிரிவைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சாந்த (வயது47) என்ற அம்பாறை மாவட்ட சிங்களப் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்.

எனினும் மேற்படிச் சிப்பாயின் மரணம் தொடர்பாக இராணுவத்தில் இருந்து எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்றும் தற்போது சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்திய சாலையில் உள்ள பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Source: http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=13280:2012-04-08-16-18-34&catid=1:aktuelle-nachrichten

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator