Sunday, April 8, 2012

வெளியுறவு அமைச்சராக மீண்டும் ரோகித போகொல்லாம?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணை வெற்றியடைந்ததன் காரணமாக சிறிலங்கா அமைச்சரவையில் பலவீனமடைந்துள்ள ஜீ. எல். பீரிஸை வெளிவிவகார அமைச்சுப் பொறுப்பிலிருந்து அகற்றிவிட்டு முன்னாள் வெளிவிவகார அமைச்சரான ரோஹித போகல்லாகமவை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மஹிந்தவின்
சகோதரருமான கோதபாய ராஜபக்ஷ வியூகம் வகுத்துள்ளார் எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் முதற்கட்டமாக, தற்போது சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் எம்.பி பதவியை வலுவிழக்கச் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. துமிந்தவின் எம்.பி பதவியை வலுவிழக்கச் செய்வதன் மூலம் அவருக்கு அடுத்தபடியாக (விருப்பு வாக்கு அடிப்படையில்) உள்ள ரோஹித போகல்லாகம எம்.பியாகப் பெயர் குறிப்பிடப்படுவார். அதன் பின்னர் அவரை வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதே கோதபாயவின் தற்போதைய இலக்கு என அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Source: http://www.vaanavil.info/

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator