Sunday, April 8, 2012

இந்தியாவின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் இலங்கை-இந்தியக் கடற்பரப்பில்!

Add caption
இந்தியாவின் கிழக்குக் கரையோரத்தில் அந் நாட்டின் முதலாவது ஆளில்லா உளவு விமானம் காண்காணிப்பில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்குமிடையிலான பாக்கு நீரிணையின் கடற் பிராந்திய நடவடிக்கைகளைக் காண்காணிக்கும் நோக்கிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன் மூலம் தமிழ் நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்திற்கு அப்பால் உள்ள பாக்கு நீரிணை, மன்னார் குடா மற்றும் பாக்கு நீரிணை குடா என்பனவற்றை துல்லியமாக கண்காணிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இராமேஸ்வரத்தில் ஆளில்லா உளவு விமான கூடம் ஒன்றை ஸ்தாபிப்பதன் மூலம் சிறந்த முறையில் இந்தியாவின் கடலோர பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
Source: http://www.eeladhesam.com

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator