Sunday, April 8, 2012

இலங்கை யுத்தத்தின் போதான தனது பாத்திரத்தை மீளாய்வு செய்ய ஆரம்பித்தது ஐ.நா.

கெலும் பண்டார)

இலங்கை யுத்தத்தின் கடைசிக் கட்டத்தில் தான் வகித்த பாத்திரம் குறித்து ஐ.நா. மீளாய்வு செய்ய ஆரம்பித்துள்ளது. இலங்கை அதிகாரிகளால் தருஸ்மன் அறிக்கை என அழைக்கப்படும், ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையில் சிபாரிசுக்கிணங்க  இம்மீளாய்வு இடம்பெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நம்பகமான வட்டாரங்கள் மூலம் தனக்கு இத்தகவல் தெரியவந்ததாக ஜெனீவாவிலுள்ள, ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம், தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.


ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில்  நிறைறே;றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்திற்கிணங்க, அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள 22 ஆவது கூட்டத்தொடரின்போது, ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் நவீ பிள்ளை விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தமரா குணநாயகம் கூறினார்.

யுத்ததால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஐ.நா. அதிகாரிகள் செல்வற்கு அனுமதிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்பாக அந்த அறிக்கையில் இலங்கை மீது குறைகூறப்படும் சாத்தியமுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, இவ்வருடம் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள, நாடுகளின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பாக ஆராயும்  கூட்டத்தில் இலங்கை  குறித்து 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படலாம் எனவும் அவர் கூறினார்.
Source: http://www.tamilmirror.lk

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator