Sunday, April 8, 2012

பரபரப்பை ஏற்படுத்தும் மலையாள பெண் எழுத்தாளரின் நவீன காமசூத்ரா!

வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான் ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர் கே.ஆர்.இந்திரா. இவரது புதிய காமசூத்ரா நூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அதற்குள்ளாகவே இந்த நூல் குறித்த எதிர்பார்ப்புகள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளனவாம்.

ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காமசூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.


ஜூன் முதல் வாரம் இந்த நவீன காமசூத்ரா விற்பனைக்கு வருகிறது. அதில் பெண்களின் உணர்வுகள், அவர்களின் எதிர்பார்ப்புகள், செக்ஸ் குறித்த அவர்களின் விருப்பங்கள் உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து எழுதியுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இதில் பல விஷயங்கள் இருக்கும். செயல்முறை விளக்கங்களையும், செக்ஸில் வெல்வதற்கான ஆலோசனைகளையும் கூட இதில் கொடுத்துள்ளேன். இது பலரது புருவங்களை உயர்த்தச் செய்யலாம், கோபப்படலாம், கொந்தளிக்கலாம், எதிர்ப்புகள் கிளம்பலாம். ஆனால் இந்த நூல் பெண்களுக்கானது, அவர்களுக்காகவே இதை எழுதியுள்ளேன். அவர்களின் செக்ஸ் சுதந்திரத்தை வலியுறுத்தி இதை எழுதியுள்ளேன். எனவே எதிர்ப்புகள் குறித்து நான் கவலைப்படப் போவதில்லை.

வாத்சாயனரின் காமசூத்ரா நூலை நான் படிக்க ஆரம்பித்தபோது, அது முழுக்க முழுக்க ஒரு ஆணால், ஆண்களுக்காகவே எழுதப்பட்டதாகவே எனக்குத் தோன்றியது. ஆணின் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள், உணர்வுகள்தான் அதில் மேலோங்கி இருந்தன. ஒரு ஆண் தனது இச்சையை எப்படித் தணிப்பது என்பதற்கான வழிகாட்டியாகவே இது தெரிந்தது. ஆணாதிக்கம் நிறைந்த நூலாகவே அது எனக்குத் தென்பட்டது. எனவேதான் பெண்களுக்கான காமசூத்ராவை எழுத நான் தீர்மானித்தேன்.

இதற்காக ஒரு ஆய்வையே நடத்தினேன். 50 கேள்விகள் அடங்கிய ஒரு வினாத்தாளை, பெண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்துக்களை அறிந்தேன். ஒவ்வொரு பெண்ணும் பத்து பேரிடம் கருத்துக் கேட்டுத் தெரிவிக்குமாறும் கோரியிருந்தேன். செக்ஸ் அனுபவம் குறித்த கேள்விகள் அவை. அவர்கள் தங்களது முழுமையான பெயர், முகவரிகளைக் கொடுக்கவில்லை. 20 சதவீதம் பேர்தான் பதிலளித்திருந்தனர்.

பெரும்பாலான மலையாளப் பெண்களுக்கு செக்ஸ் விழிப்புணர்வு இருந்தாலும் கூட அவர்கள் வெளிப்படையாக அதைச் சொல்ல முன்வரவில்லை. இருப்பினும் அவர்களுடன் தனிப்பட்ட முறையில் பேசியபோது நிறைய தகவல்களை என்னால் சேகரிக்க முடிந்தது. அதன் அடிப்படையில் இந்த நூலை எழுதினேன் என்றார்.

இந்திரா மேலும் கூறுகையில், நான் சந்தித்த மலையாளப் பெண்களிடம் பேசியதில் எனக்குத் தெரிய வந்த ஒரு உண்மை என்னவென்றால் பெரும்பாலான பெண்கள் செக்ஸ் உறவின்போது பொய்யான உச்சத்தையே (Orgasam)வெளிப்படுத்துகிறார்களாம். தங்களது கணவர் அல்லது காதலரை திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறு அவர்கள் செய்வதாக தெரிவித்தனர் என்றார் இந்திரா.

இந்திராவின் காமசூத்ரா நூலுக்கு இப்போதே கேரளாவில் பெரும் எதிர்பார்ப்புகள் அலை மோதத் தொடங்கி விட்டன. புத்தகம் வந்த பின்னர் என்ன ஆகப் போகிறதோ...

Source: http://tamil.indiansutras.com/

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator