வாத்சாயனரின் காமசூத்ரா ஆண்களுக்காக எழுதப்பட்டது. எனவே பெண்களுக்காக நான்
ஒரு புதிய காமசூத்ராவை எழுதியுள்ளேன் என்று கூறுகிறார் மலையாள எழுத்தாளர்
கே.ஆர்.இந்திரா. இவரது புதிய காமசூத்ரா நூல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால்
அதற்குள்ளாகவே இந்த நூல் குறித்த எதிர்பார்ப்புகள் சூடு பிடிக்க
ஆரம்பித்துள்ளனவாம்.
ஸ்திரைன காமசூத்ரா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த நூலின் ஆசிரியை இந்திரா ஏற்கனவே ஒரு சிறுகதைத் தொகுப்பு உள்ளிட்ட சில நூல்களை எழுதியவர். இப்போது பெண்களுக்கான காமசூத்ரா நூலை எழுதி அத்தனை பேரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.