Monday, April 23, 2012

மன்னாரில் முச்சக்கர வண்டி சாரதிகள் சிலரின் பாலியல் சேட்டை - சிறீலங்கா காவல்துறையும் உடந்தை

மன்னார் பஸார் பகுதியில் உள்ள ஒரு சில முச்சக்கர வண்டி சாரதிகள் மீள் குடியேற்ற பகுதிகளில் இருந்து மாலை நேரங்களில் மன்னாருக்கு வரும் இளம் பெண்களை தமது முச்சக்கர வண்டியில் ஏற்றி பாலியல் சேட்டைகளில் ஈடுபடுவதாகவும் இதற்கு மன்னார் சிறீலங்கா காவல்துறையினரும் உடந்தையாக உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது தெரிவிக்கின்றார்.

மன்னார் பஸார் பகுதியில் சுமார் 200 இற்கும் மேற்பட்ட முச்சக்கர வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்ற போதும் ஒரு சிலர் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமையினால் அனைவருக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செயலாக காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டள்ளனர்.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், மன்னார் நகருக்கு தற்போது நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் மக்கள் வந்து போகின்றனர். இந்த நிலையில் சிறீலங்காவின் கொடிய யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மீள் குடியேற்ற கிராம மக்களும் மன்னாருக்கு அதிகளவில் வந்து போகின்றனர். இந்த நிலையில் ஒரு சில முச்சக்கரவண்டி ஓட்டுனர்கள் தமது நண்பர்களுடன் பஸார் பகுதியில் அலைமோதி திரிகின்றனர்.

பின் சில யுவதிகளுடன் இவர்கள் கதைத்து தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ளுகின்றனர். பின் இவர்கள் மன்னார் வந்தால் இவர்களுடன் கதைந்து தனிமையாக அழைத்துச் சென்று பாலியல் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர்.
சில நேரங்களில் மாலை நேரங்களில் பெண்கள் மன்னாருக்கு வந்து தூர இடங்களுக்குச் செல்ல முச்சக்கர வண்டியை வாடகைக்கு அமர்த்தி செல்லுகின்றனர்.

இதன் போது தனியாக பெண் ஒருவர் முச்சக்கர வண்டியில் செல்லும் போது குறித்த செயற்பாடுகளுடன் ஈடுபடும் முச்சக்கர வண்டி ஓட்டுனராக இருந்தால் தனது நண்பர் ஒருவரையும் கூட ஏற்றிக்கொண்டு செல்கின்றனர். இதன்போது குறித்த பெண்களுடன் அங்கச் சேட்டையில் ஈடுபடுதல், கைத்தொலைபேசியில் புகைப்படம் எடுத்தல் போன்ற நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

குறித்த சம்பவங்களை சில பெண்கள் அச்சத்தின் காரணமாக வெளியில் கூறுவதில்லை. குறித்த சம்பவத்தில் ஈடுபடும் இளைஞர் குழுவினரால் பாதிக்கப்படும் அனைத்து பெண்களும் தமிழ்ப் பெண்கள். சில நேரங்களில் குறித்த குழுவினர் இரவு நேரங்களில் தனியாக வரும் பெண்களை அழைத்துச் சென்று கூட்டாக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்hரில் முச்சக்கர வண்டி சங்கம் இருந்தும்கூட முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு எவ்வித கட்டுப்பாடுகளையும் விதிக்காத நிலையில் அவர்களை சுதந்திரமாக செயற்பட அனுமதியை வழங்கியுள்ளது. இதனால் குறித்த சமூகச் சீர்கேட்டு சம்பவத்துடன் ஈடுபடும் குறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் இரவு பகல் பாராது பஸார் பகுதியில் காத்திருக்கின்றனர். சில நேரங்களில் இவர்கள் முச்சக்கர வண்டியிலேயே படுத்தும் விடுகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை 21-04-2012 மாலை யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் வந்த 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவரை மன்னார் அரச பஸ் தரிப்பிடத்தில் உள்ள உணவகத்தில் வேலை செய்கின்ற முஸ்ஸிம் இளைஞர் ஒருவர் கதைத்துள்ளார். பின் இரவு 8 மணியான நிலையில் குறித்த யுவதி குறித்த இளைஞனுடன் தனிமையாக செல்ல ஆயத்தமாகினர்.

இந்த நிலையில் மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பு உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் சேவையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் 4 பேர் குறித்த இளைஞரை தாக்கி விட்டு குறித்த யுவதியை பலவந்தமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தியுள்ளனர். இவர்களுடன் மன்னார் சிறீலங்கா காவல்துறையின் நிலையத்தில் கடமையாற்றுகின்ற காவல்துறையினனும் கூட்டு சேர்ந்துள்ளார்.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள கட்டிடம், பாலத்தடி, எருக்கலம் பிட்டி போன்ற இடங்களில் குறித்த யுவதியை கொண்டு சென்று பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். ஆனால் குறித்த யுவதி தற்போது எங்கே என்று தெரியவில்லை. குறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் உள்ளிட்ட 4 பேரும் எங்கே என்றும் தெரியவில்லை.

மேற்குறித்த விடயங்களை சிறீலங்காவின் படைப்புலனாய்வாளர்களின் ஆசீர்வாதத்துடன் படையினரின் ஒத்துழைப்புடனும் நடைபெறுவதாக பிறிதொரு தகவல் மன்னாரில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ளது. விடுதலைப் புலிகளின் ஆட்சிக்காலத்தின் போது எவ்வித பயமும் இல்லாமல் இரவு வேளைகளில் தன்னந்தனியாக பெண்கள் திரிந்ததை நினைவுகூரும் மன்னார் மக்கள், எப்போ அந்தக்காலம் மீள வரும் என ஏங்கித்தவிப்பதாக தெரிவிக்கின்றார்.

http://thaaitamil.com/?p=16758

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator