Monday, April 23, 2012

மன்னாரில் குப்பைகள் அகற்றுவதில் சுத்திகரிப்பு பணியாளர்கள் அசமந்தம்

தலைமன்னார் நிருபர்
Photo:Mannar.com

மன்னாரில்  குப்பை கூளங்களை அகற்றும் பணியினை மன்னார் நகரசபை மேற்கொண்டு வருகின்ற போதும் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் அசமந்தப்போக்குடன் நடந்து கொள்வதாக மன்னார் மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு, இதுபற்றி மன்னார் நகரசபையிடம் முறையிட்டுள்ளனர். சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் பலர் நிரந்தர பணியாளர்களாக காணப்படுகின்றனர். கடந்த காலங்களில் இவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்த போதும் தற்போது இவர்கள் இலாப நோக்குடன் கடமையாற்றுவதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சுத்திகரிப்பு பணியாளர்கள் வருவதை அவதானிக்கும் வீட்டு உரிமையாளர்கள் தமது வீட்டிலுள்ள குப்பைகளை பையில் கட்டி வீட்டின் முன் வைத்து அவர்களின் வாகனங்களினுள் கொட்ட முயற்சிக்கின்றபோது எங்களிடம் தர வேண்டாம்.  எமக்கு பின்னால் வரும் வண்டியில் அள்ளுவார்கள் அவர்களிடம் கொடுங்கள் என்று கூறிவிட்டு சென்று விடுவார்கள்.
ஆனால் நீண்ட நேரம் மக்கள் வீதியில் காத்து நின்று விட்டு வீட்டின் முன் குப்பையை வைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டால் பொலிஸார் வந்து பொது இடத்தில் குப்பை கொட்டியதாக வீட்டின் உரிமையாளர்கள் மீது வழக்கு தொடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
இதற்கு காரணம் இந்த சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களே, அவர்கள் சில வீடுகளுக்குச் சென்று அங்குள்ள முழு கழிவுகளையும் அகற்றிவிட்டு 1500 ரூபா முதல் 2500 ரூபா வரை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13423-2012-04-23-19-53-51.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator