Friday, April 20, 2012

மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் இல்லை! சிறீலங்கா அரசு

மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கத் தயாரில்லை என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
காணி, பொலிஸ் அதிகாரங்களைத் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை பகிரத் தயார் என சிறீலங்காவுக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய மாநிலங்களில் அமுலில் உள்ள பொலிஸ் அதிகாரங்களைப் போன்று, சிறீலங்காவில் மாகாணங்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.


இவ்வாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதனால் மத்திய அரசாங்கம் பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.

பயங்கரவாத ஒழிப்பு நிலையமொன்றை ஆரம்பிப்பதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பை வெளியிட்டுள்ளமை இதற்கு சிறந்த உதாரணமாகும் என சிறீலங்கா அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வடக்கில் சிறீலங்கா அரசாங்கம் ஏற்படுத்தி வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளது என இந்திய எதிர்க்கட்சித் தலைவர் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
Source: http://www.eeladhesam.com

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator