Thursday, April 19, 2012

இந்தியாவில் தமிழீழம் அமைக்க கருணாநிதி முயற்சிக்கலாம்: கோட்டாபய

(தமிந்த சஞ்சீவ பாலசூரிய)

தமிழக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் நனவாகாத கனவு தமிழீழம் என்றால், அவர் இலங்கையில் அல்லாமல் இந்தியாவில் அதை உருவாக்குவதற்கு பாடுபட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றுகூறினார்.

'இலங்கையிலுள்ள தமிழ் மக்களைவிட இந்தியாவில் பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கின்றனர். அவர் ஈழத்தை உருவாக்குவதற்காக இலங்கைக்கு வரக்கூடாது. இது இறைமையுள்ள ஒருநாடு. ஈழம் பற்றி பேசுபவர்களை நாம் துரோகிகளாக கருதுகிறோம்' என டெய்லி மிரருக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ  கூறினார்.


இலங்கையில் தமிழீழத்தை உருவாக்குவதற்கான சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்குமாறு ஐ.நாவை இந்தியா வலியுறுத்த வேண்டும் என கருணாநிதி கூறியமைக்கு பதிலளிக்கும் முகமாகவே கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

'இலங்கையில் யுத்தம் இல்லை. இங்கு இனங்களிடையே ஐக்கியம் நிலவுகிறது. ஒவ்வொருவரும் அமைதியாக வாழ்கின்றனர்.  இலங்கையிலுள்ள தமிழர்களை தூண்டுவதற்கு கருணாநிதி முயற்சிக்கக்கூடாது. சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி எமது நாட்டை நாசமாக்க முயற்சிக்கும் இந்திய அரசியல்வாதிகள் பலரில் கருணாநிதியும் ஒருவர்.

அவர்கள் இத்தகைய மலிவான அரசியல் தந்திரோபாயத்தை கடைப்பிடிப்பது பரிதாபகரமானது. எமது நாடு இறைமையுள்ள ஒரு நாடு என்பதையும் இங்கு ஈழம் அமைக்க முயற்சிக்க கூடாது என்பதையும் கருணாநிதி உணர வேண்டும். அவர் அதை செய்ய விரும்பினால், அதிக எண்ணிக்கையான தமிழ் மக்கள் வசிக்கும் தமிழ் நாட்டில்  அதை செய்யலாம்' என பாதுகாப்புச் செயலாளர்  கோட்டாபய ராஜபக்ஷ கூறினார்.
source: http://www.tamilmirror.lk/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator