Thursday, April 19, 2012

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு ஓர் அன்பு மடல்

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு முதற்கண் வணக்கம். அவசரமாக இக்கடிதம் எழுதப்படுகின்றது. தமிழ்-முஸ்லிம் உறவு என்பது நீண்டகாலமாக நட்பு, அன்புடையதாக இருந்துள்ளது. எனினும் இடைப்பட்ட காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட இடப்பெயர்வுகள் துன்பமான தென்பது மறுக்கமுடியாததே. அதேநேரம் உங்களின் இடப்பெயர்வு நியாயப்படுத்தவும் முடியாதவை. எனினும் உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தமிழ் மக்கள் மெளனமாக அழுததும் உண்டு. ஆனாலும் முஸ்லிம் சகோதரர்கள் தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை-இடப்பெயர்வை தமிழ் மக்க ளால் ஏற்பட்டதாகக் கருதுகின்றனர் என எண்ணத் தோன்றுகின்றது.


அண்மையில் சம்மாந்துறை வலய கல்விப் பணிப்பாளர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந் திருந்தார். யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அவர், அதிபர்கள் மத்தியில் உரையாற்றும்போது, வணக்கம் தெரிவிப்பதற்கு முன்னதாகவே, நான் கிளி நொச்சியைச் சேர்ந்தவன். எங்களை நீங்கள் துரத்தினீர்கள். அதனை நாம் ஒருபோதும் மறக்கவும் மாட்டோம் மன்னிக்கவும் மாட்டோம் என்றார். பண்பாடு நிறைந்த யாழ்ப்பாணத்து மண்ணில் சம்மாந்துறைக் கல்விப் பணிப்பாளர் இவ்வாறு கூறிய தும் அங்கிருந்த அதிபர்கள் அதிர்ந்து போயினர்.

கல்விச் சமூகத்தின் பணிப்பாளராக இருக்கக் கூடிய ஒரு முஸ்லிம் கல்வியாளனிடம் இவ் வாறான வக்கிரம் இருக்கிறது என்பதே அந்த அதிர்ச்சிக்கான காரணம். அன்பிற்குரிய முஸ்லிம் சகோதரர்களே! நாங்களும் நீங்களும் இந்த நாட்டில் பட்ட துன் பம் கொஞ்சமல்ல. அந்த துன்பங்கள் களையப்பட வேண்டுமாயின், தமிழ்-முஸ்லிம் உறவு கட்டியயழுப்பப்பட வேண்டும். அந்த உறவு யாழ்ப்பாணத்திலிருந்து தான் கட்டியயழுப்பப்பட வேண்டும் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

அதற்கான ஏற்பாடுகளை யாழ்ப்பாணத்திலுள்ள இந்து-கிறிஸ்தவ-முஸ்லிம் மதத் தலை வர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து உருவாக்க முடியும். அண்மையில் கூட காளை மாட்டுப் பிரச்சினை ஒன்று பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. உண் மையில் தமிழ்-முஸ்லிம் சமூகப் பிரதிநிதிகள் ஆரோக்கிய பண்புடன் செயற்பட்டிருந்தால் அந்தப் பிரச்சினையை மிகச் சுமுகமாக தீர்த்திருக்க முடியும். இந்து மக்களின் வழிபாட்டுச் சின்னமாக இருக்கக்கூடிய காளை மாட்டிலிருந்துகூட தமிழ்-முஸ்லிம் உறவு கட்டியயழுப்பப்பட்டிருக்கலாம்.

ஆனால் ‘விடக்கூடாது’ என்ற உணர்வில் நிலைமை நகர்கிறது. இதனைத் தூண்டி விடுவதிலும் சிலர் பலமாகச் செயற்படுகின்றனர். சம்பந்தப்பட்ட காளை மாடு இந்து சமயம் சார்ந்த விடயமாகி விட்டது என்பதால் மாட்டின் உரிமையாளர் தனது மனச்சாட்சிப்படி செயலாற்றுகின்ற சந்தர்ப்பம் இப்போது கிடைத்திருக்கின்றது. அந்தச் சந்தர்ப்பத்தை அவருடன் முஸ்லிம் மதத் தலைவர்களும் இணைந்து செய்ய முடியும். காளை மாட்டின் பெறுமதியைப் பெற்றுக்கொண்டு அதனை கீரிமலை நகுலேஸ்வரத்திற்கு ஒப்படைப்பது என்ற முடிபுக்கு வருவார்களாயின், அதனை மக்கள் சமூகம் உயர் பண்பாகக் கருதிக்கொள்ளும். 

source: http://www.valampurii.com/online/viewnews.php?ID=28257

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator