Sunday, April 22, 2012

நாய்களுக்காக புதிய தொலைக்காட்சி சேனல் தொடக்கம்

நாய்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கும் புதிய தொலைக்காட்சி சேனல் ஒன்று அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ளது.

நாய்களை வளர்ப்பது, அவற்றை பராமரிப்பது போன்றவை குறித்து அறிந்து கொள்ளும் வகையில் இந்த சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
நாய்கள் காணும் வகையில் ஒலி, இசை, வண்ணங்களில் நிகழ்ச்சிகள் 8 மணி நேரம் ஒளிபரப்பப்படும். வர்த்தக நோக்கில் அல்லாமலும், ஏற்கனவே ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் மீண்டும் இடம்பெறாத வகையில் தொடர்ந்து புதுப்புது நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும்.


மேலும் நாய்கள் குறித்து அனுப்பப்படும் கடிதங்களில் உள்ள கருத்துகளுக்கு ஏற்பவும் நிகழ்ச்சிகளில் மாற்றம் கொண்டு வரப்படும். அமெரிக்காவில் தொடங்கப்பட்டுள்ள நாய்களுக்கான இந்த சேனலுக்கு தற்போது 10 லட்சம் பேர் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

Source: http://www.thinakkural.com/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator