Sunday, April 22, 2012

சோனியா காந்தியின் அனுமதியின்றி இலங்கை அரசியல்வாதிகளை சந்திப்பதற்குக் கட்டுப்பாடு:

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவியான சோனியா காந்தியின் அனுமதியின்றி, இலங்கையின் அரசியல் வாதிகளைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு இந்திய உயர்மட்டத் தலைவர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமைப்பீடத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானம் இலங்கையில் நடைமுறைக்கு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகள், உயர்மட்ட அரசியல் தலைவர்கள், முக்கிய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் போன்றோரைச் சந்திப்பதற்கான அனுமதி மறுக்கப்படு மெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய அரசின் இந்தத் திடீர் முடிவுக்குச் சரியான காரணம் தெரியவரவில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது இந்தியா ஆதரவளித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு சிக்கலானதாக மாறிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.seithy.com/breifNews.php?newsID=58986&category=TamilNews&language=tamil

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator