Saturday, April 21, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்பட்டது!

தம்புள்ளையில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டிருந்த பள்ளிவாசல் இன்று சனிக்கிழமை பொலிஸாரினால் மீண்டும் திறக்கப்பட்டது.

அமைச்சர்கள் ஏ.எச்.எம்.பௌஸி, றிசாட் பதியுதீன் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக், ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் முஸ்லிம் மீடியா போரம் தலைவருமான என்.எம். அமீன் ஆகியோர் கொண்ட குழு இன்று காலை இப்பள்ளிவாசலை பார்வையிட்டதுடன் அப்பகுதி மக்களையும் சந்தித்து பேசினர்.


இக்குழுவினர் பள்ளிவாசலை அடையும் முன்னர் பள்ளிவாசல் திறக்கப்பட்டு தூய்மையாக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்ததாக என்.எம்.அமீன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

தம்புள்ளையில் வசிக்கும் பல்லின மக்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றும் பள்ளிவாசல் முன்னால் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய வசந்த குமார நவரட்ண என்பவர் தான் 47 வருடங்களாக தம்புள்ளையில் வசிப்பதாகவும் இப்பள்ளிவாசல் அங்கிருப்பதை தனது சிறுவயது முதல் அறிந்திருந்ததாகவும் கூறினார்.

தம்புள்ளை மக்கள் இப்பள்ளிவாலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 5 சதவீதமானோர் மாத்திரமே அப்பகுதியைச் சேர்ந்தவர்கள். ஏனையோர் வெளியிடங்களைச் சேர்ந்தவர்களே.

உள்ளூர் அரசியல்வாதிகள் இருவர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளித்தனர். புனித பிரதேசம் என்ற பெயரில் இங்குள்ள மக்களை வெளியேற்றுதற்கு திட்டமிடப்படுகிறது. அதற்காக பள்ளிவாசலை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.’ என்றார்.

மக்களிடம் தான் கேட்டறிந்த கருத்துக்கள் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும் என அமைச்சர் பௌஸி கூறினார். புத்த சாசன அமைச்சின் ஏற்பாட்டில் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தின்போது பள்ளிவாசல் குறித்த ஏனைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.


http://thaaitamil.com/?p=16505

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator