Saturday, April 21, 2012

(MAERSK) மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை

டென்மார்க்கின் பிரபலமான தொழில் அதிபர் மாஸ்க் கெனி மக் மூலரின் இறுதிக்கிரியைகள் கொல்மன்ஸ் தேவாலயத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இது தனிப்பட்ட குடும்ப நிகழ்வாகவே நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டேனிஸ் மகாராணியார் இந்த வைபவத்தில் பங்கேற்க இருக்கிறார்.

மாமனிதன் மாஸ்க் ஒரு வரலாற்றுப் பார்வை

1903 ம் ஆண்டு யூலை மாதம் 23 ம் திகதி பிறந்தார்.
1930 ல் கப்பல் மாலுமிக்கான பரீட்சையில் சித்தியடைந்தார்.
1932 ல் பிரான்ஸ், ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மாலுமியாக பணியாற்றினார்.



1938 ல் கோப்பன்கேகன் திரும்பி தந்தையின் ஏ.பி.மூலர் நிறுவனத்தில் சேர்ந்தார்.
1939 ல் டென்மார்க் நீராவிக் கப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இடம் பெற்றார்.
1940 ல் உயர்நிலை பாடசாலையில் படித்த காலத்தில் விரும்பிய எமா நியகோட் ராஸ்முசனை மணமுடித்தார். குடும்பம் அமெரிக்கா பயணித்தது.
1947 ல் லீசா, கியஸ்ரன் என்ற இரண்டு மகள்களுடன் மறுபடியும் டென்மார்க் திரும்பினர்.
1948 ல் மூன்றாவது மகள் அனா பிறந்தார். இவரே இன்றைய தலைமை நிர்வாகி.


1965 ல் தனது தந்தையிடமிருந்து ஏ.பி.மூலர் நிறுவனத்தை பொறுப்பேற்றார்.

1970 ல் ஐ.பி.எம் நிர்வாக சபையில் இடம் பெற்றார். ஐ.பி.எம்மில் இடம் பெற்ற முதல் அமெரிக்கர் அல்லாத ஒருவர் இவராகும்.
1972 ல் வடகடலில் எண்ணெய் அகழ்வுப்பணியை ஆரம்பித்தார்.
1979 ல் தொழிற்துறை சாதனையாளர் பரிசு கிடைக்கிறது.
1982 ல் தமது நிதியத்தை வேறு நாட்டுக்கு மாற்றியவர் மறுபடியும் டென்மார்க் கொண்டு வந்தார்.
1993 ல் அமெரிக்க அரசு வழங்கும் வர்த்தகப் பரிசு கிடைத்தது.


1998 ல் சீனா அதிபர் ஸியாங் ஜெமினை சந்தத்தார்.
2000 ல் நூற்றாண்டு தொழிற்துறை தலைவர் பரிசு கிடைத்தது.
2001 ல் ஸ்வன்போ நகரசபை தனது கௌரவ பிரஜையாக இவரை தெரிவு செய்தது.
2003 ல் தனது தலைமைப்பதவியை மிக்கேல் பாம் ராஸ்முசனிடம் கொடுத்தார்.
2005 ல் கோப்பன்கேகன் ஒபரா இல்லம் கட்ட தனது மனைவியின் நிதியத்தில் இருந்து பணத்தைக் கொடுத்தார்.


2012 ல் இம்மாதம் 12ம் திகதி மாஸ்க் நிர்வாக சபைக்கூட்டத்தில் பங்கேற்றார். 16ம் திகதி தமது 98 வது வயதில் மரணமடைந்தார். வரும் சனிக்கிழமை இவரது இறுதி யாத்திரை வெகு அமைதியாக ஆரம்பிக்கிறது.

டென்மார்க் வாழ் தமிழ் மக்கள் தமது அதி உயர் மரியாதைகளை அந்த பெருமகனாருக்கு வழங்குகிறார்கள்.
http://www.alaikal.com/news/?p=103096

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator