Saturday, April 21, 2012

வடபகுதி உட்பட நாட்டின் பல பாகங்களிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

தற்போது, ஏற்பட்டுள்ள கால நிலைமாற்றம் காரணமாக நாட்டின் பல பாகங்களில் இன்று காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடிய வாயப்பு ஏற்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
 
இதன்படி, இன்று காலை வேளையில் நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குறிப்பிட்ட சிலபகுதிகளில் மழை பெய்யக் கூடும் எனவும், மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களிற்கும் ஆங்காங்கே மழையினை எதிர் பார்க்க முடியும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
 
இதேவேளை, சிலபகுதிகளில் மின்னல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்கும்படியும் காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator