Friday, April 20, 2012

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு –

மாகாணசபைகளுக்கான முழுமையான அதிகாரங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் தார்மீக பொறுப்பு – பிள்ளையான்.
 
இந்தியாவின் ஒத்துழைப்பினால் 1987 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமைக்கு அமைய அதில் உள்ளடக்கப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் மாகாணசபைகளுக்கு கிடைக் இந்திய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசந்துறை சந்திரகாந்தன் இந்திய நாடாளுமன்ற குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழு இன்று முற்பகல் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தது.
 
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சரை குறித்த இந்திய நாடாளுமன்றக்குழு சந்தித்த போதே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
 
இந்த சந்திப்பின் போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண முதலமைச்சர் 
 
'1987 ம் ஆண்டு மாகாணசபை முறையினை இலங்கைக்கு அறிமுகப்படுத்தியது இந்தியாதான். இந்தியாவின் காத்திரமான பங்களிப்பினாலேயே 1978 ம் ஆண்டு மாகாணசபை முறைமை ஏற்படுத்தப்பட்டது.
 
ஆனாலும் இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இங்கு செயலற்று காணப்படுகின்றது. அதிலுள்ள பல அதிகாரங்கள் இல்லாமல் இருக்கின்றது.
 
எனவே மாகாணசபை முறைமையில் என்னென்ன அதிகாரங்கள் உள்ளடக்கப்பட்டிருந்ததோ அவையமைத்தும் மாகாணசபைகளுக்கு கிடைக்கும்படி செய்யவேண்டிய தார்மீக பொறுப்பு இந்தியாவிற்கு இருக்கின்றது.
 
இதனை அவர்கள் செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
Source: http://www.globaltamilnews.net/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator