Friday, April 20, 2012

ஆதிவாசிகளை பார்ப்பது போல இலங்கைத் தமிழர்களை பார்வையிட்டுச் சென்ற இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள்: கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா விமர்சிப்பு.

4-20 12:41:17]
வழமையாக இலங்கைத் தமிழர்களை ஏமாற்றும் இந்தியாவின் கபட நாடகம் ஒன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் சுற்றுலாப் பயணம் செய்யும் இந்தியாவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு ஆதிவாசிகளைப் பார்ப்பது போலவே இலங்கைத் தமிழர்களைப் பார்வையிட்டுச் சென்றுள்ளது."
இவ்வாறு கூறியுள்ளார் இலங்கை நவ சமசமாஜக் கட்சியின் தலைவரான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா.

இலங்கையில் தற்போது சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை தொடர்பாகவும் அவர்களது நோக்கம் தொடர்பாகவும் கடுமையான விமர்சனம் ஒன்றை முன்வைத்துள்ள அவர் மேலும் கூறுகையில் "தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கவேண்டும் என்று ஆணித்தரமாகவும் அழுத்தமாகவும் இலங்கை அரசிற்கு தெரிவிக்காத இந்திய பாராளுமன்ற குழுவின் விஜயமானது வெறும் உல்லாசப் பயணமாகும்.
யுத்தம் முடிந்து 3 வருடங்கள் ஆகிவிட்ட நிலையிலும் மக்கள் தமது சொந்த இடங்களுக்கு மீண்டும் சென்று குடியேற முடியாத நிலையிலேயே இராணுவம் தடையாக உள்ளது. ஆனால் இவற்றையெல்லாம் கண்டும் காணாதவர்களாக இலங்கைக்குள் சுற்றுப் பயணம் செய்யும் மேற்படி இந்தியக் குழு, அழுத்தமாக எதையும் கூறாமல் அதிகாரத்தை பரவலாக்குங்கள், மக்களை மீள குடியேற்றுங்கள் என்றெல்லாம் "பம்மாத்து" காட்டுகின்றது. தற்போது தலையாடடும் இலங்கை அரசு எதிர்காலத்தில் எதையும் செய்யாது என்;பதே உண்மை. எனவே ஏமாற்றப்படப் போகின்றவர்கள் தமிழ் மக்களே" இவ்வாறு கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னா தெரிவித்துள்ளார்.
Source: http://www.seithy.com/breifNews.php?newsID=58909&category=TamilNews&language=tamil

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator