Saturday, April 28, 2012

மன்னார் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவதில் சிக்கல்

தலைமன்னார் நிருபர்

மன்னார் பஸார் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் பெண்களை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் இரவு 7 மணிக்குப் பின்பே வீடு செல்ல அனுமதிப்பதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்  கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட   பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பல பெண்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் காலை 8 மணிக்கு வந்தால் இரவு 7 மணிக்கே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

அதிகளவாக இளம் யுவதிகளே வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்றனர். ஒரு  சில  வர்த்தக நிலையங்களில்  கடமையாற்றுகின்ற பெண்கள் மாலை 6. 30 மணிக்கு முன் வீடு செல்ல அனுமதிக்கின்றனர்.
ஆனால் பல வர்த்தக நிலையங்களில் கடமையாற்றுகின்ற பெண்கள் இரவு 7 மணிக்குப் பின்பே வீடு செல்ல அனுமதிக்கின்றனர். இந்தப் பெண்கள் முழு நாள் வேலை செய்கின்ற போதும் சொற்ப அளவு சம்பளம் வழங்கப்படுகின்றது.
நாங்கள்  தனியாக வீடு செல்கின்ற போது பல்வேறு பிரச்சினைகளுக்கு   முகம் கொடுத்து வருகின்றோம்.  எனவே  உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் தலையிட்டு  தங்கள்  நேரத்திற்கு வீடு செல்ல ஆவன செய்ய வேண்டுமென  பாதிக்கப்பட்ட  பெண்கள்  வேண்டுகோள் விடுக்கின்றனர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13700-2012-04-28-10-15-26.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator