Showing posts with label Mannar Network News. Show all posts
Showing posts with label Mannar Network News. Show all posts

Saturday, April 28, 2012

மன்னார் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் பெண்கள் இரவு நேரத்தில் வீடு திரும்புவதில் சிக்கல்

தலைமன்னார் நிருபர்

மன்னார் பஸார் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களில் கடமையாற்றும் பெண்களை வியாபார நிலையங்களின் உரிமையாளர்கள் இரவு 7 மணிக்குப் பின்பே வீடு செல்ல அனுமதிப்பதால் தாம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம்  கொடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட   பெண்கள் தெரிவிக்கின்றனர்.
மன்னார் பஸார் பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் பல பெண்கள் கடமையாற்றி வருகின்றனர். இவர்கள் காலை 8 மணிக்கு வந்தால் இரவு 7 மணிக்கே வீடு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர்.

Thursday, April 26, 2012

வடக்கில் சுகாதார ஊழியர் நியமனத்தில் பாரிய முறைகேடுகள் செல்வம் எம்.பி.முறைப்பாடு

மன்னார் நிருபர்
மன்னார் மற்றும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளுக்கு ஊழியர்களை நியமிப்பது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். சுகாதார அதிகாரி பணிமனை ஊழியர்களை நியமிப்பது தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த போதும் நேர்முகத் தேர்வு எவையும் இடம்பெறாத நிலையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் முறைகேடான நியமனம் வழங்கப்பட்டமை குறித்தும் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திர சிறியின் கவனத்திற்குக் கொண்டு வந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Wednesday, April 18, 2012

வவுனியா மனிக்பார்மில் இந்திய நாடாளுமன்றக் குழு

இலங்கை வந்துள்ள இந்திய நாடாளுமன்றக் குழுவினர் இன்று காலை வவுனியா மனிக்பார்ம் இடைத்தங்கல் முகாமுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.
முன்னதாக இரண்டு உலங்கு வானூர்திகளில் வந்திறங்கிய இக்குழுவினரை வவுனியா அரச அதிபர் திருமதி சாள்ஸ் வரவேற்று அழைத்துச் சென்று இடம்பெயர்ந்துள்ள மக்களின் நிலைமைகள், மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகள் என்பன குறித்து விளக்கமளித்தார்.
இறுதி யுத்தத்தையடுத்து, மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்ட 3 லட்சம் மக்களில் 6000 பேர் மாத்திரமே இன்னும் இங்கு மிஞ்சியுள்ளதாகவும், ஏனையோர் அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இந்தியக் குழுவினரிடம் கூறினார்.

கற்பிட்டி கடற்பரப்பில் அச்சம்! அதிசயம்!! நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள்

இலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக  இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில்  இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.
கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மன்னார் வீதிப் போக்குவரத்து பொலிஸார் விசித்திரிரமான முறையில் இலஞ்சம் அறவீடு

மன்னாரில் கடமையாற்றுகின்ற வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் சிலர் தற்போது மக்களிடம் விசித்திரமான முறையில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக பணமாகவும், மதுபான வகைகளாகவும் இலஞ்சத்தை பெற்றுள்ளனர். ஆனால் தற்போது வித்தியசமான முறையில் தமது இலஞ்சத்தை பெற்றுக்கொள்ளுகின்றனர்.
துவிச்சகரகர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சிறு தவறுகள் இழைக்கும் பட்சத்தில் அவர்களை மறித்து, நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாகவும் அதற்கு கூடுதலாக தண்டப்பணம் அறிவிடப்படும் எனவும் கூறுகின்றனர்.

தலைமன்னாரின் பல பகுதிகளிலும் சட்டவிரோதமாக பனைமரம் தறிப்பு


தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் பல ஏக்கர் கணக்காண காணிகளில் உள்ள பனை மரங்கள் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சட்டவிரோதமான முறையில் வெட்டப்படுவதாக பனை மர காணிகளின் உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தலைமன்னார் கிராமம் மற்றும் தலைமன்னார் பியர் கிராமங்களில் தனியாருக்குச் சொந்தமான பல ஏக்கர் கணக்கில் காணிகள் உள்ளன. இந்தக் காணிகளில் பல ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளன. இந்தப் பனை மரத்தின் மூலம் அம்மக்கள் தமது வருமானத்தை தேடிக்கொள்ளுகின்றனர்.
இந்த நிலையில் இந்தக் காணிகளுக்குள் செல்லுவோர் பொலிஸாரின் உதவியுடன் பனை மரங்களை வெட்டிச் செல்லுகின்றனர்.
திருடப்படும் பனை மரங்களை சீவி அதிகூடிய விலைக்கு விற்கின்றனர். இந்தச் செயல்களில் ஈடுபடுவோர் பொலிஸாருக்கு இலஞ்சப்பணத்தை வழங்கி வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

Friday, April 6, 2012

கூடன்குளம் அணு உலையை நெருங்கும் ஆபத்துகள்!அறிவியல் ஆராய்ச்சியில் திடுக்கிடும் தகவல்


சாலையில் நடந்து  செல்லும்போது கூட விபத்து ஏற்பட்டு சாவு வரலாம். எதில்தான் ஆபத்து இல்லை? அணு உலையும் அப்படித்தான். அதை எதிர்த்து ஏன் உதயக்குமார் உள்ளிட்டவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்? என்பது பல்வேறு பட்ட மக்களின் கேள்வி. இந்த கேள்விக்கான பதிலை… தொடர்ந்து அணு உலைக்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் மக்கள் மருத்துவர் புகழேந்தியிடம் கேட்டோம்.

“அணு உலை பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. பாதுகாப்பாகத்தான் உள்ளது என்று மத்திய மாநில அரசுகள்…வல்லுநர் குழுக்கள்…அணுசக்தி நிர்வாகத்தினர்…எல்லோருமே சொல்லித்தான் கூடன்குளம் அணு உலையை திறந்திருக்கிறார்கள்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator