Wednesday, April 18, 2012

கற்பிட்டி கடற்பரப்பில் அச்சம்! அதிசயம்!! நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள்

இலங்கையின் வடக்கு கற்பிட்டி கடற்பரப்பில் நூற்றுக்கு மேற்பட்ட ஆண் திமிங்கலங்கள் கடந்த சனிக்கிழமை காணப்பட்டதாக  இலங்கையின் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரையிலிருந்து சற்று தூரத்தில்  இந்த திமிங்கலங்கள் காணப்பட்டது முன்னொரு போதும் நடக்காத காரியம் என அந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்.
கடலில் நீர்மட்டத்திற்கு கீழ் உள்ள பாறைகளிலிருந்து இவை மேல் கிளம்பி வந்திருக்கலாம் என்றும், கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம், மற்றும் மன்னார் பகுதி கடலில் மேற்கொள்ளப்படும் எண்ணெய் ஆராய்ச்சி ஆகியவற்றால் இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திமிங்கலம் 67அடி நீளமாக வளரக்கூடியது என்றும், இவை ஆண் இனத்தை சேர்ந்தவை என்றும், அதன் ஒரு பகுதி மிருங்களைப்போன்றது என்றும் கரையோர பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஒரு பொதுவான நிகழ்வு அல்ல என்றும், அசாதாரண நிகழ்வின் போதுதான் நூற்றுக்கு மேற்பட்ட திமிங்கலங்கள் ஒன்றாக கரையை நோக்கிவருகின்றன என கடல் தாவர ஆராய்ச்சியாளர் ஆஜா டி வோஸ் தெரிவித்தார்.
அதி உஷ்ணம் மற்றும் நிலநடுக்கம் காரணமாக இவை கரையை நோக்கி வந்திருக்கலாம் என்றும் இவை ஒரே தாய்வழியை கொண்டவையாக இருக்கலாம் என்றும் ஆஜா தெரிவித்தார். இதற்கு முன்னர் இந்த கடல் பகுதியில் தாம் நடத்திய ஆய்வின் போது 40க்கு மேற்பட்ட திமிங்கலங்களை கண்டதாகவும், தற்போது நூற்று மேற்பட்ட திமிங்கலங்கள் காணப்பட்டது அதிசயமான ஒன்றுதான் என்றும் அவர் தெரிவித்தார்.
வழக்கத்திற்கு மாறாக திமிங்கல கூட்டம் பெருந்தொகையில் காணப்பட்டது அச்சம் தரும் வி;டயம் என்று அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இத்திமிங்கலங்கள் பெரிய படகுகளை கூட கவிழ்க்க கூடியதாகும்.   இலங்கைக்கு பாரிய அழிவு ஒன்று வரப்போவதன் அறிகுறியாக இது இருக்கலாம் என அப்பிரதேச மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். அப்பிரதேச மீனவர்களும் கடலுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.
Source: http://www.thinakkathir.com/?p=34786

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator