மன்னாரில் கடமையாற்றுகின்ற வீதி போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் சிலர்
தற்போது மக்களிடம் விசித்திரமான முறையில் இலஞ்சம் பெற்றுக்கொள்ளுவதாக
மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
அண்மைக்காலமாக பணமாகவும், மதுபான வகைகளாகவும் இலஞ்சத்தை பெற்றுள்ளனர்.
ஆனால் தற்போது வித்தியசமான முறையில் தமது இலஞ்சத்தை
பெற்றுக்கொள்ளுகின்றனர்.
துவிச்சகரகர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் சிறு தவறுகள் இழைக்கும் பட்சத்தில் அவர்களை மறித்து, நீதிமன்றம் கொண்டு செல்லப் போவதாகவும் அதற்கு கூடுதலாக தண்டப்பணம் அறிவிடப்படும் எனவும் கூறுகின்றனர்.
பின்னர், தமது கையடக்கத் தொலைபேசிக்கு மீள் நிரப்பும் அட்டைகள் வேண்டித் தருமாறு பிடிவாதத்துடன் நிற்கின்றனர். 100 ரூபா, 200 ரூபா, 500 ரூபா மீள் நிரப்பும் அட்டைகளை வேண்டித் தருமாறு கேட்கின்றனர்.
அல்லது தமது தொலைபேசி இலக்கம் எழுதப்பட்ட துண்டுகளை வைத்திருக்கும் சில வீதிப்போக்குவரத்துப் பிரிவு பொலிஸார், அவர்களிடம் பிடிபடும் அப்பாவிகளிடம் கொடுத்து அவர்கள் கூறும் தொகைக்கு “றீ லோட்’ போட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
SourcE: http://www.thinakkural.com/news/all-news/local/13005-2012-04-18-07-16-26.html

No comments:
Post a Comment