Saturday, April 7, 2012

கொரியாவில் வேலை தேடுவோருக்காக இணையத்தளம் _

கொரிய மொழி பரீட்சையில் சித்தி அடைந்தவர்கள் தம்மைப் பற்றிய விபரங்களையும் வேலை ஒப்பந்தங்களையும் www.eps.go.kr என்ற இணைத்தளத்தை பார்வையிடலாம். இணையத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பது போல் வேலை தேடுபவர் email கணக்கொன்றை ஆரம்பிப்பதன் மூலம் கொரிய மனிதவள மையத்தில் வேலை ஒப்பந்த விபரங்களைப் பெறமுடியும்.

விண்ணப்பகாரருக்கு பின் இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இணையத்தளத்தை பார்வையிடலாம்.



கொரியாவில் வேலை தேடுபவர்கள் பாகுபாடின்றியும், நீதியாகவும் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்காக வெளிநாட்டு தொழில் அமைச்சர் டிலான் பெரேராவால் முன்னெடுக்கப்பட்ட திட்டமாகும்.

தமது தனியான முன்னேற்றம் பற்றி எல்லா விண்ணப்பதாரரும் வெளிப்படையாக இத்திட்டத்தின் மூலம் தகவல்களைப் பெறலாம். பணத்திற்காக வேலை பெற்று தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் ஏமாற வேண்டாமெனவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் கோருகிறது .

இப்பணியகத்தின் அறிக்கையின் படி, 2011 ஆம் ஆண்டு அக்டோபரில் கொரிய மொழியில் சித்திடைந்த 9,998 பேரில் 5,000 பேர் ஏற்கனவே வேலைக்குச் சென்று விட்டார்கள். 2010ஆம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைந்து இன்னும் வேலை வாய்ப்பின்றி இருப்போருக்கே முன்னுரிமை வழங்கப்படும். 25,000 இலங்கையர்கள் கொரியாவில் பணிபுரிகிறார்கள்.

இலங்கைக்கும் தென் கொரிய அரசுகளுக்குமிடையிலான ஒப்பந்தத்தின் மூலமே தொழிலாளர் வேலைக்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.
___Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37484

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator