கொழும்பு – மதுரை இடையே விமான போக்குவரத்து ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்திலோ சென்னையைத் தவிர வேறு எதுவும் சர்வதேச விமான நிலையங்களாக இல்லை. இத்தனைக்கும் மதுரையும், கோவையும், முழுக்க தகுதி படைத்த நகரங்களாகவே உள்ளன. ஆனாலும், இங்கிருக்கும் விமான நிலையங்கள் உள்நாட்டு விமானங்களை மட்டுமே இயக்கி வருகின்றன.
தொழிநுட்ப துறையில் ஏற்பட்ட வளர்ச்சியும் அந்த துறை அளித்த மிகப் பெரிய பங்களிப்பையும் இந்த இரு நகரங்களும் பெற முடியாமல் போனதற்கு இங்கு சர்வதேச விமான நிலையங்கள் இல்லாததே காரணம்.
மதுரை – கொழும்பிற்கு இடையில் விமான போக்குவரத்தை ஏர்லங்கா நிறுவனம் ஏர் இந்தியாவும் சர்வதேச விமான சேவையை மதுரையிலிருந்து ஆரம்பிக்கவுள்ளன.
மதுரை மற்றும் தென்மாவட்டங்களைச் சேர்ந்த மிக அதிகமான மக்கள் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்து வருகின்றனர். இவர்களின் வசதிக்காக சிங்கப்பூர், கோலாலம்பூர் மற்றும் கொழும்பு நகரங்களுக்கு மதுரையில் இருந்து, ஏர் இந்தியா விமானங்கள் இயங்கவுள்ளன.