Saturday, April 7, 2012

தாம்பத்யத்திற்கு உற்சாகம் தரும் வைட்டமின் பி

உடல் ஆரோக்கியத்திற்கும், பாலுணர்வுக்கும் தொடர்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள். உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய உணவு வகைகளைச் சாப்பிட்டு நல்ல உடல்நலத்தைப் பராமரித்தாலே பாலுணர்வுக்கான லிபிடோ சக்தி ஆரோக்கியமானதாக அமையும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆரோக்கியமான உடல்

உடல் நலத்தை நல்ல முறையில் பராமரித்தாலே, பாலுறவில் ஆரோக்கியமான நிலையை அடைய முடியும். அன்றாட வாழ்வில் நம் உடல் நலத்திற்குத் தேவையான உணவு வகைகளைச் சாப்பிடுவதே பாலுறவுக்கும் போதுமானது. காய்கறிகள், பழங்கள், பருப்பு மற்றும் தானிய வகைகளுடன் அரிசி-கோதுமை உணவுகளையும் சாப்பிடுவதால், உடல் ஆரோக்கியம் நீடித்து இருப்பதுடன், தாம்பத்ய உறவில் ஈடுபட சிறப்பான பலன் கிடைப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆரோக்கியமான பாலுறவை மேற்கொள்ள வேண்டுமானால், நமது உடலில் அமிலத்தன்மையைக் குறைத்து, காரத்தன்மையை அதிகரித்தல் அவசியம். இதற்கு அதிக அளவில் பழங்களையும், காய்கறிகளையும் சாப்பிடவேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்

காய்கறிகள், பழங்கள்

பாலுறவைத் தூண்டக்கூடிய ஹார்மோன்களை அதிகளவு உற்பத்தி செய்யக்கூடியவற்றில் வைட்டமின்-பி முக்கியப் பங்காற்றுகின்றன.

வைட்டமின்-பி உடலுக்கு ஆற்றலை அளித்து இரத்த சிகப்பு அணுக்களை அதிகரிக்கிறது. உடலின் நரம்புகள் சிறப்பாகச் செயல்படவும் வைட்டமின்-பி அவசியமாகிறது. பச்சைப்பட்டாணி, பருப்பு வகைகள், பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பால் பொருட்கள், கீரை வகைகள், காளான்கள், முட்டை, பழங்கள் போன்றவற்றில் வைட்டமின்-பி அதிகம் உள்ளது எனவே இவற்றை தினசரி உணவுகளில் சேர்த்துக்கொள்வதன் மூலம் உற்சாகம் அதிகரிக்கும்.

பி1 - தையாமின்

பழுப்பு நிற அரிசி, கடல் உணவுகள், கோதுமை, தாணியங்களில் உள்ள பி1 வைட்டமின் உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. உறவிற்கான உற்சாகத்தையும் அளிக்கிறது.

இதயத்தில் இருந்து நரம்புகள் வழியாக ரத்தமானது எளிதான அனைத்து பகுதிகளுக்கும் தடங்கல் இல்லாமல் செல்வதற்கு பி1 - தையாமின் வைட்டமின் பயன்படுகிறது. இதனால் சரியான அளவிற்கு சக்தி கிடைப்பதோடு மூளைக்கு சரியான வேகத்தில் வேலை செய்ய உதவுகிறது. உறவுக்கு முந்தைய முன் விளையாட்டுக்களை தூண்டுவதே மூளையில் ஏற்படும் இந்த கிளர்ச்சிதான். இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இளையவர்களுக்கு உறவில் ஈடுபடும்போது ஒரு தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

பி2 - ரிபோஃப்ளோவின்

இந்த வைட்டமின் சத்து உடலில் உள்ள திசுக்களை இளமையாக்குகிறது. தலைமுடி, தோல், நகங்கள் போன்றவைகளை பளபளப்பாக்குகிறது. இதனால் இளமை பூரிப்போடு உறவில் ஈடுபட துணையை ஈர்க்கிறது. எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலம் ஆரோக்கியமான தாம்பத்திய உறவில் ஈடுபட முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator