அமெரிக்காவினால் ஈரான்மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையினால்
ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணையின் எண்ணெயின் அளவை குறைக்க
வேண்டியுள்ளதாக பெற்றோலியத் துறை அமைச்சர் சுசில் பிரேமஜயந்த
தெரிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து இலங்கைக்கு வருடாந்தம் 13 கப்பல் மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டு, இலங்கையில் சுத்திகரிக்கப்படுகிறது.
எனினும் மேற்படி தடை காரணமாக எண்ணெய் கொள்வனவும் ஈரானுடன் டொலரில் வர்த்தகம் செய்வதும் கடினமாகியுள்ளது.
இலங்கை தனது வருடாந்த மொத்த எண்ணெய் கொள்வனவை தலா 135,000 தொன் கொண்ட 3 கப்பல் தொகுதிகளால் குறைக்க முடிந்தால் எஞ்சிய எண்ணெய் தொகைய டொலருக்குப் பதிலாக வேறு நாணயமொன்றை பயன்படுத்தி ஈரானிலிருந்து இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். இதற்காக இந்திய ரூபாவை பயன்படுத்துதல் உட்பட பல்வேறு தெரிவுகள் உள்ளதாக அமைச்சர் கூறினார்.
இதேவேளை, தடைகாரணமாக, ஈரானிலிருந்து இலங்கை இறக்குமதி செய்யும் எண்ணெயின் அளவு குறைவடையும் எனனினும் அதன் தாக்கத்தை குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஈரானிய தூதரகம் தெரிவித்துள்ளது.
இத்தாக்கம் தற்காலிகமானதாக இருக்கும் என இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மொஹமட் நபி ஹசனிபோர் கூறினார். 'எமது நண்பனான இலங்கைக்கு நாம் ஆதரவளிக்கவும் அதன் இனிய மக்கள் பாதிப்புக்கு உள்ளாகாதிருப்பதற்கும் முயற்சிக்கிறோம்.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நாம் எம்மாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம்' என அவர் கூறினார்.
இத்தடையின் காரணமாக ஆசியாவைவிட மேற்குலகத்திற்கே அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:
Post a Comment