Tuesday, April 24, 2012

லண்டன் மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற பெண் நெரிசலில் சிக்கி மரணம்

லண்டனில் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் திடீரென்று மயங்கி விழுந்த கிளாரா ஸ்கொயர்ஸ் என்ற 30 வயது பெண் மரணம் அடைந்தார்.
தற்போது இந்த பெண்ணிற்காக பலரும் நிதி திரட்டி வருகின்றனர், இதற்காக பலரும் நன்கொடை அளித்துள்ளனர். இந்த நிதித்தொகை 20,000 பவுண்டிற்கு மேல் திரளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாராவின் தாயார் சில்லா கடந்த 24 ஆண்டுகளாக சமூக சேவைகள் செய்து வந்தார். எனவே தற்போது திரட்டப்படும் நிதித் தொகை, அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு பொதுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்று இந்த ஒலிம்பிக் போட்டியை நடத்திய கேத்தரின் கூறியுள்ளார்.

இதுகுறித்து கிளாராவின் தோழி நிக்கோலா ஷார்ட் கூறுகையில், கிளாரா சமூகப் பணிகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர், தங்களுக்கெல்லாம் ஒரு தூண்டுதலாக இருந்தார், எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்தார். அவருடைய இழப்பு ஈடுசெய்ய முடியாதது என்று வருத்தத்துடன் கூறினார்.
கடந்த 1981ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மரதன் ஓட்டப் போட்டியில் இதுவரை 11 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
uk_marathon_1
uk_marathon_2
uk_marathon_3
uk_marathon_4
Source: http://www.thinakkural.com/sport/sport-news/world/13517-2012-04-24-19-35-31.html

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator