Wednesday, April 11, 2012

இயந்திரக் கோளாறு காரணமாக கடலில் விழுந்தது ரஷ்ய செயற்கை கோள்.


ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான செயற்‌கை கோள் பசிபிக் பெருங்கடலில் விழுந்ததாக அந்நாட்டு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. ரஷ்ய ராணுவத்திற்கு சொந்தமான செயற்கை கோளான மோல்னியா-1 வகை செயற்கைகோள் விண்ணில் செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை இரவு திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவை கடலில் விழுந்துள்ளதாக ராணுவத்தரப்பினர் கூறினர்.
இது குறித்து ரஷ்ய வான்வெளிபாதுகாப்புத்துறை அமைசச்சகத்தின்‌ செய்தி தொடர்பாளர் அலெக்ஸிஜோலோடுக்கின் கூறுகையில் கடந்த 1996-ம் ஆண்டு முதல்முறையாக ஆகஸ்ட் மாதம் 1.6 டன் எடை ‌க‌ொண்ட மெரிடியன் வகை செயற்கை‌கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மோல்னியா-1 வகை செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. என அவர் தெரிவித்தார். Source: http://www.pathivu.com/news/20547/57/.aspx

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator