Sunday, April 22, 2012

இலங்கை அணி வீரர் முபாரக் கைது _

கொழும்பு - சிலாபம் வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெஹான் முபாரக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெஹான் முபாரக் செலுத்தி வந்த டிபென்டர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. இதனையடுத்து சைக்கிளில் பயணித்த இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றையவர் படுகாயமடைந்துள்ளார்.



தும்மலசூரிய - வத்துவத்த பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமார என்பவர் உயிரிழந்துள்ளதோடு படுகாயமடைந்த மாக்கஸ் உதயகுமார் என்பவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். _
Source: http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37725

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator