காய்ச்சல், உடல் வலியை போக்க ஊசி போட்டனர். சிறிது நேரத்தில் அந்த பெண் மாரடைப்பு ஏற்பட்டு துடித்தார். அவரை காப்பாற்றுவதற்காக டாக்டர்கள் போராடினர்.
டாக்டர்கள் சிலர் அவரது நெஞ்சை பிடித்து அமுத்திவிட, மற்றொரு டாக்டர் அந்த பெண்ணின் வாயில் தனது வாயை வைத்து காற்றை உள்ளே செலுத்தினார். மேலும் சிகிச்சை அளிப்பதற்கும், ஊசி போடவும் வசதியாக அவரது உடலில் இருந்த ஆடைகள் அகற்றப்பட்டன
டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் அந்தப் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.
இளம்பெண் இறந்ததை அறிந்ததும் சிகிச்சை முறையை தவறாக புரிந்து கொண்டு, அவருடன் இருந்தவர் டாக்டர்கள் நோயாளியிடம் தவறாக நடந்து கொண்டு கொன்று விட்டனர் என்று கூச்சல் போட்டார்.
உடனே, வெளியில் இருந்த அந்தப்பெண்ணின் உறவினர்கள் அவசர வார்டுக்குள் நுழைந்து டாக்டர் களை சரமாரியாக அடித்து உதைத்தனர். மேலும், வார்டில் இருந்த மருந்து, மாத்திரைகளை அள்ளி வீசினர். டிராலிகளையும், டெலிபோன், வெண்டிலேசன் கருவி போன்றவற்றையும் அடித்து சேதப்படுத்தினர்.
இந்த ரகளையில் சுமார் 25 பேர் ஈடுபட்டதால், ஆஸ்பத்திரி காவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.
இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வந்ததும் ரகளை கும்பல் அடங்கியது. தாக்குதலில் டாக்டர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதை கண்டித்து டாக்டர்களும் ஆஸ்பத்திரி ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் அதிகாரிகள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர்.
Source: http://www.nakkheeeran.com/users/frmNews.aspx?N=74474
No comments:
Post a Comment