கடந்த வன்னி யுத்தத்தின் பின் மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ள
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நாயாத்து வழி பாதையில்
அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சோதனைச்சாவடியினால் பொது மக்கள் தொடர்ந்தும்
இராணுவத்தினரால் அசௌகரியங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மக்கள் விசனம்
தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியூடாக விடத்தல் தீவு,சன்னார்,ஈச்சலவக்கை,பெரிய மடு,கோவில் குளம் ஆகிய கிராமங்களுக்கும் சங்குப்பிட்டி வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கும் போக்குவரத்துச் சேவைகள் இடம் பெறுகின்றமை வழமை.
இந்த நிலையில் குறித்த நாயாத்து வழி பாதையில் அமைக்கப்பட்டுள்ள இராணுவத்தின் சோதனைச் சாவடியினால் பயணிகள் பல சிரமங்களை எதிர் நோக்குகின்றனர்.
ஈதே சமயம் குறித்த சோதனைச்சாவடிக்கு முன்பாகவும் வீதி காணப்படுகின்றது. குறித்த வீதியினால் அடம்பன்,ஆண்டாங்குளம்,உயிலங்குளம் போன்ற மீள் குடியேற்றக்கிராமங்களுக் கும் செல்ல முடியும்.
இந்த நிலையில் உந்துருளி மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்கள் குறித்த சோதனைச்சாவடியில் நிறுத்தி பெயர்,முகவரி,அடையாள அட்டை இலக்கம்,வாகன இலக்கம்,எங்கிருந்து எங்கே செல்லுகின்றிர்கள் என பதிய வேண்டும்.
இதே சமயம் பஸ்ஸில் பயணிப்பவர்களின் அடையாள அட்டைகளும் பரிசோதனை செய்யப்படுகின்றது.
குறித்த கெடுபிடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த நடவடிக்கைகளினால் மக்கள் பல நேரம் குறித்த இடத்தில் காத்திருந்து செல்லவேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
தற்போது நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ்வதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதும் மக்களை சுதந்திரமாக பயணிப்பதற்கும்,நடமாடுவதற்கும் இயலாத அளவிற்கு பாதுகாப்பு கெடுபிடிகள் தற்போது அதிகரித்துள்ளதாகவு மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மாந்தை மேற்கில் உள்ள உரிய அரச அதிகாரிகள் இவ்விடயத்தில் தொடர்ந்தும் அலட்சியத்துடன் செயற்படுவதோடு குறித்த அதிகாரிகள் காணி அபகரிப்பு,மக்களை வெளியேற்றுதல் போன்ற செயற்பாடுகளிலே அதிகம் அக்கறை செலுத்தி வருவதாகவும் அம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
http://thaaitamil.com/?p=16669

No comments:
Post a Comment