Sunday, April 22, 2012

அடுத்த இரு நாட்களுக்கு கியூபெக், ஒன்றாரியோவை பெரும் பனிப்புயல் தாக்கலாம்- சுற்றுச் சூழல் கனடா எச்சரிக்கை

எதிர்வரும் மூன்று நாட்களிலும் கியூபெக்கில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என வானிலை அவதானிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 20 சென்றிமீட்டர்கள் அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கியூபெக் நகர வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன் பாதிப்பு ஒன்றோரோரியோவின் அனைத்து பகுதிகளிலும் உணரக் கூடும் என்பதால் ஒன்றோரியோவைச் சேர்ந்தவர்களும்
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிறு இரவு கிழக்கு , தெற்கு , மற்றும் மத்திய ஒன்ரோறியோ பகுதிகளில் துவங்கும் இந்த பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை நீடிக்கக் கூடும். ஒட்டவா, கிங்க்ஸ்டன், பீட்டர்போரோ, ரொறொன்ரோ , ஹமில்டன் பகுதிகளில் பல வாகனங்கள் பனியில் புதையக்கூடும் எனவும் எதிர்பார்க்க்கப்ப்டுகிறது.
இந்த பகுதிகளின் வெப்பநிலை நாளை முதல் 1 டிகிரியாக இருக்கும் எனவும் பல இடங்களில் உறை நிலைக்கும் குறைவான வெப்ப நிலை நிலவலாம் எனவும் அவதானிக்கப்பட்டுள்ளது. 
கடந்த வருடம் இதே மாதத்தில் நாட்டின் வெப்பல்நிலை 10  டிகிரியாக இருந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே வானிலையில் திடிரென  பல மாற்றங்கள் உண்டாகி வருவதால் வெளியில் செல்வோர் அனைவரும் மிகுந்த அக்கறையுடன் கவனிப்புடனும் இருந்து  கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
Source: http://www.ekuruvi.com

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator