திருகோணமலை மாவட்டத்தின் வடக்கு எல்லைக் கிராமமான தென்னைமரவாடியில் வன்
செயல்களுக்கு இலக்காகி சேதமாக்கப்பட்ட நிலையில் காணப்படும் பிள்ளையார்
கோயிலின்
புனரமைப்புக்காக ஐந்து இலட்சம் ரூபா நிதியை தனது பன்முகப்படுத்தப்பட்ட
வரவுசெலவுத் திட்ட நிதியிலிருந்து ஒதுக்கித்தருவதாகத் திருகோணமலை மாவட்டப்
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை காலை தென்னைமரவாடிக் கிராமத்திற்குச் சென்ற சம்பந்தன் சேதமடைந்த நிலையில் காணப்படும் பிள்ளையார் ஆலயத்தைப் பார்வையிட்டார். 1984 வன் செயலின் போது, இக்கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பொன்னகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த குடும்பங்களில் சுமார் 70 குடும்பங்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமத்தில் குடியமர்ந்துள்ளனர். அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே சம்பந்தன் ஆலய புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
சம்பந்தன் மேலும் சொன்னதாவது;
தென்னைமரவாடி கிராம மக்கள் இடப்பெயர்வுக்குள்ளாகி துயரங்களுடன் வாழ்வதை நான் அறிவேன். அடிப்படை வாழ்வாதார வசதிகள் இல்லாத நிலையில் மீளக்குடியமர்ந்த மக்கள் துன்பப்படுகின்றார்கள். உடனடிப் பிரச்சினைகளுக்கு அரசை அணுகினால் ஏதே ஒரு வகையில் தீர்வை காண முடியும்’ அது பிற்சாந்தியின் எதிர்காலத்திற்கு நன்மையாக அமையாது. எமக்கென ஒரு அரசியல் முறைமை ஏற்படுத்தப்பட்டு, எம் மக்கள் தங்களின் அதிகாரத்தை பெறும் இலக்கிலிருந்து பின்வாங்க முடியாது. எமது இனம் பிச்சை எடுத்து வாழும் இனமாக வாழ்வதற்கு இடம் கொடுக்கப்படக்கூடாது’ என்று கூறினார். பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் அங்கு உரையாற்றினர்.
Source: http://www.thinakkural.com/news/all-news/local/13319------5------.html

No comments:
Post a Comment