Friday, April 20, 2012

மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி

பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு விவகார அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய நாடாமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாய்ன் மெக்டொனாக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் அது போர்க் குற்றவாளிகளை சகித்துக்கொள்ளவதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்கு பங்கமாகிவிடும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி எம்பியான மெக்டொனாக் வியாழனன்று கூறினார்.


மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த குறிப்பொன்று 3 மாதங்களுக்குமுன் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் ஆனால் அவர் மீதான ராஜதந்திர பாதுகாப்பை விலக்குவதற்கு அவ்வலுவலகம் மறுத்துவிட்டதாகவும் மெக்டொனாக் கூறினார்;.

‘இது குறித்தும் ராஜதந்திர பாதுகாப்பு துஷ்பிரயோகம் செய்யப்படுவது குறித்தும் விவாதமொன்றை நடத்தலாம் என எண்ணுகிறேன். அவர் வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் போர்க் குற்றவாளிகளை சகித்துக்கொள்ளவதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்கு பங்கமாகிவிடும்.

இலங்கை மீது நாம் மென்போக்கை காட்டினால், நாம் அட்டூழியங்களை புரிபவரகளுக்கு அடைக்கலம் வழங்குபவர்கள் என ஏனைய ஆட்சியாளர்களும் நிச்சயமாக கருதத் தொடங்குவர்’ என அவர்கூறினார்.


http://thaaitamil.com/?p=16402

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator