பிரிட்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் பாதுகாப்பு விவகார
அதிகாரியாக பணியாற்றும் மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா மீதான போர்க்
குற்றச்சாட்டுகள் குறித்து பிரித்தானிய நாடாமன்றத்தில் எதிர்க்கட்சி
நாடாளுமன்ற உறுப்பினர் சியோபாய்ன் மெக்டொனாக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா விசாரிக்கப்படாமல் வெளியேற அனுமதிக்கப்பட்டால் அது போர்க் குற்றவாளிகளை சகித்துக்கொள்ளவதில்லை என்ற பிரிட்டனின் புகழுக்கு பங்கமாகிவிடும் என பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி எம்பியான மெக்டொனாக் வியாழனன்று கூறினார்.