Monday, April 23, 2012

அமைச்சர் பீரிஸின் இரகசிய செயல்திட்டம்

கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார்.
 நேற்று 22.04.2012 அன்று சண்டேரைம்ஸ் எழுதியிருந்த அரசியல் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி


கடந்த வாரம் திங்கட்கிழமையன்று இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மிகப் பெரிய அசட்டுத் தனமான ராஜதந்திர தவறை இழைத்தார்.
வெளியுறவு அமைச்சினால் நடைபெற்ற பத்திரிகையாளர் மகாநாட்டின் போது இந்தத் தவறு இழைக்கப்பட்டது. அந்த மகாநாட்டில் இஸ்ரேல் நாட்டின் வெளியுறவு அமைச்சரோ, அல்லது அந்த நாட்டின் தூதுவரோ வந்திருக்கவில்லை. ஆனால் அமைச் சர் பீரிஸ் பின்வருமாறு தமது பேச்சை ஆரம்பித்தார்.
"டாக்டர் றியாத் அல் மாலிக்கி, இஸ்ரேல் நாட்டின் கௌரவ வெளிநாட்ட மைச்சர் அவர்களே, இஸ்ரேல் நாட்டின் தூதுவர் அவர்களே,...'' மேற்குறித்த இரு கௌரவ பிரமுகர்களும் பாலஸ்தீன நாட்டை பிரதிநிதித்துவம் செய்தவர்களாவர். இலங்கைக்கு இரு நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு வந்திருந்த பாலஸ்தீன அதிபர் மகம்மத் அப்பாஸூடன் இலங்கை வந்திருந்தவர் அந்தநாட்டின் வெளியுறவு அமைச்சர் மாலிக் ஆவார். பீரிஸ் நடத்திய பத்திரி கையாளர் மகாநாட்டில் அவரும் கலந்து கொண்டிருந்தார்.
பாலஸ்தீன தூதுவர் டாக்டர் அன்வர் அல் ஆகாவும் வந்திருந்தார். பீரிஸின் வரவேற்பைக் கேட்டதும் அவ்விருவரின் முகங்களும் சிவந்து போய்விட்டன பீரிஸ் இரண்டு தடவைகள் இஸ்ரேலைக் குறிப்பிட்ட போது இருபாலஸ்தீன பிரமுகர்களின் முகங்களும் நாணத்தினால் சிவப்பேறிக் காணப்பட்டன. தூதுவர் ஆகா சங்கடத்துடன் வெளிப்படுத்திய உடல் மொழியை அவதானித்த பிறகுதான் பீரிஸ் தான் விட்ட தவறை உணர்ந்து கொண்டு "சொறி' என்றார். பிறகு பேச்சைத் தொடர்ந்தார்.
உண்மையில் சில நிமிடங்கள் வரை பாலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான வித்தியாசத்தை அமைச்சர் பீரிஸ் மறந்து விட்டிருந்ததுபோல் தெரிந்தது. பாலஸ்தீனத்துடன் இலங்கை நெருங்கிய உறவுகளைக் கொண்டிருப்பது மட்டுமல்ல ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இளம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் பாலஸ்தீனியரின் விடுதலைக் கோரிக்கை தொடர்பாக குரல் கொடுப்பவராகவும் இருந் துள்ளார்.
அவரைக் கௌரவிப்பதற்காகப் பாலஸ்தீனத்தில் ஒருவீதி அதிபர் மஹிந்த ராஜபக்ஷ வீதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்ததற்குப் பிறகு வெளியுறவு அமைச்சினால் நிகழ்த் தப்பட்டுள்ள மிகப் பெரிய அபத்தமான குளறுபடி இதுவாகும்.
இந்த நிலையில்தான் வாஷிங்டனில் ஐந்துநாள் பிரயாணம் ஒன்றை மேற்கொண்டு ஒபாமா நிர்வாகிகளுடன் ஆலோசனைகள் நடத்துவதற்காக ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறார் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப் புக்குள் கடந்த மாதம் மனித உரிமைப் பேரவையில் ஏற்பட்ட தோல்வி தொடர்பாக உள்கட்சி குத்து வெட்டுகள் பற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்தான் பீரிஸின் வாஷிங்டனுக்கான பிரயாண ஆயத்தங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
பெரிய எடுப்பிலான இரு பெரும் குழுக்களை ஜெனிவாவுக்கு அனுப்பியும் கூட இலங்கை  மீதான அமெரிக்கத் தீர்மானத்தைத் தடுத்து நிறுத்த முடியாமல் போயிற்று. அது பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.
இந்தியா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்கப் போகின்றது என்பது தெரிய வந்த நிலையில் கடைசி நேரத்தில் சீனா தலையிட்டுச் செயல்பட்டதால் ஓர் இரு நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்க முன்வந்ததாக அரச வட்டாரங்கள் தெரிவித்தன. 
இதன் காரணமாக சில நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கவும் ஊக்கப்படுத்தப்பட்டனவாம். இலங்கைக்குழுவில் சென்ற முக்கிய பிரமுகர்களுக்கு தமது குழுவில் எத்தனைபேர் இருந்தார்கள் என்ற எண்ணிக் கைகூட தெரியாமல் இருந்துள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் கூறினார்; எங்களால் எண்ணிக்கை விவரம் ஒன்றை வைத்துக்கொள்ள முடியவில்லை.
சிலர் வந்து கொண்டிருந்தார்கள். மற்றவர்கள் போய்க் கொண்டிருந்தார்கள்'' என்றார் அவர்.
இதனால் அரசுக்கு மில்லியன் கணக்கான டொலர் வீண் செலவு ஏற்பட்டது என்றார் அவர் மேலும். 
அரசின் உண்மை நிலைப்பாடு
அரச தலைவர்கள் ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொண்டும், முரண்பாடான கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் சில முக்கிய அரசு தரப்பு முக்கியஸ்தர்கள் மூலமாகவே வெளிவருகின்றன.
இப்பொழுது தீர்மானத்தின் சில முக்கிய அம்சங்களுக்கு செவிசாய்க்க அரசு தீர்மானித்திருப்பது தெரிய வந்துள்ளது. இதில் முக்கியமான விடயம் என்ன வெனில் செயல்திட்டம் ஒன்றை உருவாக்குவதாகும்.
இதில் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் உண்மையைக் கண்டறியும் குழுவின் பரிந்துரைகளில், இனிமேல் செயல்படுத்தவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகின்றது.
இவ்வாறு செயல்திட்டம் ஒன்றை உருவாக்கும் பொறுப்பு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தமது அமைச்சின் உயர் மட்ட அதிகாரிகளின் உதவியுடன் அவ்வாறான திட்டமொன்றுக்கான வரைவு ஒன்றை அவர் தயாரித்திருக்கிறார். ஆனால் அந்த ஆவணம் தற்போதைக்கு இரகசியமாகப் பேணப்பட்டு வருகின்றது. அடுத்தமாதம் வாஷிங்டனில் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஹில்லாரி கிளின்ரனைச் சந்திக்கும்போது அதன் விவரங்களை அவருடன் பகிர்ந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தவகையில் ஜெனிவாத் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற முயல்கிறது என்பதை, கிளின்ரனுக்கு பீரிஸ் விளக்கி அவரை திருப்திப்படுத்த முயல்வார் என்று தெரிகிறது. இது இரகசியமாக வைக்கப்பட்டிருந்த போதிலும் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பல அம்சங்கள் கொண்ட ஆவணம் ஒன்றை அமைச்சர் சிங்கள மொழியில் தயாரித்திருக்கிறார்.
இதன் பிரதிகள் கட்சித்தலைவர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இவைகள் பற்றி நுணுக்கமாக ஆராய்ந்து கொண்டு ஏப்ரல் 28 ஆம் திகதி நடை பெறவிருக்கும் கூட்டத்துக்கு வரும்படி ஜனாதிபதி அவர்களை கேட்டுள்ளார்.
 ஆணைக்குழுவின் எந்தெந்த பரிந்துரைகளை செயல்திட்டத்தில் இடம்பெறச் செய்யலாம் என்பதை அதில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது. அடுத்தவாரம் தென்கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளவிருக்கும் ஜனாதிபதி குறித்த திகதிக்கு முன் நாடு திரும்பிவிடுவார் என்று தெரிகின்றது.
அரசாங்கம் ஆணைக்குழு பரிந்துரைகள் தொடர்பாக எடுக்கவிருக்கும் செயல்பாடுகள் தொடர்பில் கட்சித்தலைவர்கள் தம்மோடு இணைந்து நகர வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நோக்கம் என்று தெரிகின்றது. அவ்வாறாயின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய வழிமுறைகளை இது நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பீரிஸ் தயாரித்துள்ள ஆவணத்தில் கட்சித் தலைவர்கள் மேலும் வெட்டும் குறைப்புகளும் செய்வதற்கு பலமான சாத்தியக் கூறுகள் காணப்படுகின்றன. தமக்கு விருப்பமான அம்சங்கள் மாத்திரமே செயல்திட்டத்தில் இடம்பெற வேண்டும் என்று அவர்கள் விரும்பக்கூடும்.
ஆனால், ஜெனிவா தீர்மானமானது விரிவானதொரு செயல்திட்டத்தை மட்டுமல்ல சர்வதேச சட்ட மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அமைச்சர் பீரிஸ் பேசும்போது நல்லிணக்க ஆணைக்குழு தெரிவித்துள்ள பரிந்துரைகள் அனைத்தையும் அரசு செயல்படுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார். எனவே அவர் தயாரித்திருக்கும் செயல்திட்டத்தில் அவரால் தெரிவு செய்யப்படும் பரிந்துரைகள் மட்டுமே இடம்பெறும் என்பது தெளிவு. 
வரும் 28 ஆம் திகதி கட்சித் தலைவர்கள் மகாநாட்டில் அதில் இன்னும் தெரிவுகளுக்கு இடம் இருக்கின்றது. அமைச்சர் பீரிஸ் அமெரிக்காவுக்குச் செல்லவிருப்பதையொட்டியே செயல் திட்டம் மற்றும் ஆயத்தம் இடம்பெற்று வருகின்றது. மே 18 ஆம் திகதி அவர் ஹிலாரி கிளின்ரனைச் சந்திப்பதாகக் குறிக்கப்பட்டுள்ளது. பீரிஸ் அமெரிக்காவில் கொங்கிரஸ் தலைவர்களையும் சந்திக்கவிருக்கிறார்.
புரூக்கிங் நிறுவனத்தில் விரிவுரை யொன்றையும் நிகழ்த்துவார். செயல்திட்டம் தொடர்பான விவரங்கள் மட்டுமன்றி இலங்கையில் காணாமல் போய் இருப்பவர்கள் மற்றும் ஆள் கடத்தல்கள் தொடர்பாகவும் அமெரிக்க தலைவர்கள் கேள்விகள் எழுப்ப இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது.
அமைச்சர் பீரிஸின் செயல்திட்டம் மற்றும் அமெரிக்க பிரயாணத்துக்கான ஏற்பாடுகள் யாவும் பல கேள்விகளை எழுப்புகின்றன. ஒன்று என்னவென்றால் அவருடைய திட்டத்தில் உள்ளடக்கப்படாத விடயங்களை எவ்வாறு அட்டவணையிடப் போகிறார்?  என்பது.
மனித உரிமைப் பேரவை தீர்மானத்தில் காணப்படும் மூன்று பிரதான விடயங்களில் முதலாவதாக உள்ளது யாதெனில், நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் ஆக்கபூர்வமான அம்சங்களை செயல்படுத்த வேண்டும். மற்றும் அதன் சகல இலங்கையர்களுக்குமான நீதி, பொறுப்புக் கூறல் மீள் நல்லிணக்கம் என்பவற்றை உறுதிப்படுத்தும் நம்பகமான சுயாதீனமான நடவடிக்கைகளை எடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்று வதற்கு தேவைப்படும் அதற்குரிய சட்டப் பிரிவுகளை நிறைவேற்ற மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பவைகளாகும்.
ஆக்க பூர்வமான பரிந்துரைகள் மற்றும் நம்பகமான சுயாதீன நடவடிக்கைகள் என் பவற்றில் இலங்கை அமெரிக்க நிலைப்பாடுகளில் வேறுபாடு உண்டு என்பதில் சந்தேகமில்லை. இன்னொரு அம்சம் என்னவெனில் மேற்படி நடவடிக்கைகளில் இலங்கை அரசு ஈடுபடுவதற்கு அந்த அரசின் கலந்துரையாடலோடும், சம்மதத்தோடும் ஆலோசனை, தொழில்நுட்பங்களை வழங்கும்படியாக மனித உரிமைபேரவையின் ஆணையாளர் மற்றும் சிறப்பு ஆணைகளைப் பெற்றிருப்பவர்களையும், தீர்மானம் ஊக்கப்படுத்துகின்றது என்பதாகும். முந்திய தீர்மானத்தில் கலந்துரையாடலோடும், சம்மதத்தோடும் என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கவில்லை. இந்தியாவின் வலி யுறுத்தலின் பேரில் பின்னர் இந்தச் சொற்கள் நீக்கப்பட்டன.
தீர்மானத்தை நிறைவேற்றுவதில் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடமிருந்து தொழில் நுட்பவிடயங்கள் தொடர்பான ஆலோசனைகளை இலங்கை அரசு இப்போது எதிர்பார்த்திருக்கிறது.
Source: http://184.107.230.170/~onlineut/Admin/news/Upload/Essay/7ec53f05b30038b1c19fd7b7df12b61d.jpg

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator