Monday, April 23, 2012

ஒலிம்பிக்கிற்கான தகுதியைப் பெற்ற முதலாவது இலங்கையர் இந்திரஜித் குரே

லண்டன் 2012 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் பங்குபற்றுவதற்கான தகுதியைப் பெற்ற முதலாவது இலங்கையர் என்ற பெருமையை அநுராத இந்திரஜித் குரெ பெற்றுக்கொண்டுள்ளார்.

லண்டனில் ஞாயிறன்று (ஏப்ரல் 22) நடைபெற்ற 32ஆவது வேர்ஜின் லண்டன் மரதன் போட்டியின்போது லண்டன் 2012 ஒலிம்பிக்கிற்கான குறித்த தராதர நேரப் பெறுதியான 2 மணித்தியாலங்கள் 18 செக்கன்களைவிட 10 செக்கன்கள் குறைவாக எடுத்துக்கொண்டதன் மூலம் அவர் இந்தத் தகுதியைப் பெற்றார்.



உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட லண்டன் மரதன் போட்டியை 2 மணித்தியாலங்கள், 17 செக்கன்கள், 50 செக்கன்களில் நிறைவுசெய்த அநுராத இந்திரஜித் குரே 23ஆவது இடத்தைப் பெற்றார். இப் போட்டியில் கென்யாவின் வில்சன் கிப்சாங் (2:04:44) முதலாம் இடத்தைப் பெற்றார்.

1986 பார்ஸிலோனா ஒலிம்பிக் விழாவில் எஸ். ஏ. கருணாரட்னவும் 2000 சிட்னி ஒலிம்பிக் விழாவில் சரத் பிரசன்ன கமகேயும் இலங்கை சார்பாக மரதன் போட்டியில் கலந்துகொண்டிருந்தனர்.

இவர்களைத் தொடர்ந்து 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் விழா மரதனில் போட்டியிட்ட இந்திரஜித் குரே இப்போது லண்டன் ஒலிம்பிக் மரதனில் பங்குபற்ற தகுதிபெற்றுள்ளார். பெரும்பாலும் தேசிய ஒலிம்பிக் குழு இவரது பெயரை ஒலிம்பிக் மரதன் போட்டிக்கு சமர்ப்பிக்கும் என நம்பப்படுகின்றது.

பசுமையைத் தேடி ஐக்கிய இராச்சியத்தில் குடியேறியுள்ள 32 வயதான இந்திரஜித் குரே தற்போது வேல் ஒவ் ஐல்ஸ்பெறி மெய்வல்லுநர் கழக உறுப்பினராவார்.

Source; http://www.virakesari.lk/

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator