திருநெல்வேலி: நெல்லை அருகே வான் மோதிய விபத்தில் இரட்டைச் சகோதரர்கள் பலியாயினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்,அய்யனார்குளம் தெருவைச் சேர்ந்த ஜனார்த்தனன் மகன்கள் ராமர், லட்சுமணன். 18 வயதாகும் இவர்கள் இருவரும் இரட்டையர்கள். பாளையங்கோட்டை அருகே உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தனர். கல்லிடை குறிச்சியில் அவர்களது தந்தை நடத்திவரும் பீடி கம்பெனியில் அவ்வப்போது சென்று பணிகளை கவனித்து வருவார்கள். செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு கல்லிடைகுறிச்சியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பினர். ராமர் வண்டியை ஓட்ட லட்சுமணன் பின்னால் அமர்ந்திருந்தார்.
கல்லிடைக்குறிச்சியில் இருந்து அம்பாசமுத்திரம் செல்லும் ரோட்டில் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது எதிரே அம்பையில் இருந்து சுண்ணாம்பு ஏற்றிவந்த சரக்கு வான் இவர்களது வண்டியின் மீது மோதியது. வண்டியில் இருந்து இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இதில் லட்சுமணன் ஆபத்தான நிலையில் அம்பாசமுத்திரம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சம்பவம் குறித்து கல்லிட குறிச்சி பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சிகிச்சைக்காக ராமர் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு புதன்கிழமை அதிகாலை இறந்தார். வான் சாரதியான நெல்லை பேட்டையைச் சேர்ந்த குமார் என்பவரை கைது செய்தனர். இருவரும் ஹெல்மெட் அணியவில்லை. இரட்டையர்களாக வலம் வந்த கல்லூரி மாணவர்களின் இறப்பு ஒரே நேரத்தில் நிகழ்ந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Source: http://www.thinakkural.com/news/all-news/india/13126-2012-04-19-20-02-19.html

No comments:
Post a Comment