Friday, April 20, 2012

3 படத்திற்கு நஷ்டஈடு தருகிறோம்: தனுஷ், ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், சுருதிஹாசன் நடித்த 3 படம் தற்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த படத்தில் இடம்பெற்ற கொலவெறி பாடல் முன்கூட்டியே இணைய தளங்களில் வெளியாகி உலகம் முழுவதும் பிரபலமானதால் படத்துக்கு பெரிய எதிர்பாப்பு ஏற்பட்டது.

விநியோகஸ்தர்கள் பெருந்தொகை கொடுத்து படத்தை வாங்கி திரையிட்டனர். படம் எதிர்பார்த்தபடி ஓடாமல் நஷ்டம் அடைந்து உள்ளதாக தெலுங்கு விநியோகஸ்தர் நட்டிகுமார் கூறியுள்ளார்.


இதுகுறித்து ஐதராபாத்தில் அவர் பேட்டியளிக்கையில், ஆந்திராவில் 3 படத்தை வாங்கி நான் வெளியிட்டேன். படம் தோல்வி அடைந்ததால் 80 சதவீதம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

ரஜினி இந்த படத்தின் விநியோகத்தில் தனக்கு சம்பந்தம் இல்லை என்று கூறியுள்ளார். சினிமாவில் நஷ்டம் ஏற்படுவது சாதாரண விடயம். ஆனால் 3 படத்தில் பெரிய நஷ்டத்தை சந்தித்துள்ளோம்.

இந்த படத்தை 6½ கோடி செலவில் தயாரித்தனர். கொலவெறி பாடலை வைத்து ரூ.50 கோடிக்கு விற்றுவிட்டார்கள். படத்தின் தயாரிப்பாளர் கஸ்தூரிராஜாவை எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

தனுசும், ஐஸ்வர்யாவும் உங்கள் நஷ்டத்தை ஈடுகட்டுகிறோம். எவ்வளவு தொகை வசூலானது என்று விபரங்களை அனுப்பி வையுங்கள் என்று கூறியுள்ளனர்.

மேலும் அவர்கள் இப்படி ஆறுதலாக கூறியது சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் எவ்வளவு நஷ்டஈடு கொடுப்பார்கள் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
Source: http://www.viduppu.com

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator