Saturday, April 21, 2012

திருமணத்திற்கு வற்புறுத்தியதால் காதலியைக் கொன்று வீட்டு வாசலில் புதைத்த ஏட்டைய்யா மகன்

மதுரை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய காதலியைக் கொன்று வீட்டு வாசலில் புதைத்த ஏட்டு மகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகம் அருகே வசித்து வருபவர் பொன்னுச்சாமி. மேலூர் காவல் நிலையத்தில் ஏட்டாக உள்ளார். அவரது மகன் பாபு. கல்லூரியில் 3ம் ஆண்டு ஆங்கில இலக்கியம் படித்து வருகிறார். மதுரை குலமங்கலம் அருகே உள்ள வடுகபட்டியைச் சேர்ந்த ஞானசேகர் மகள் கஸ்தூரி (21). அவர் உசிலம்பட்டியில் உள்ள விளையாட்டு சாதனங்கள் விற்கும் கடையில் வேலை செய்து வந்தார்.


விளையாட்டு சாதனங்கள் வாங்க அந்த கடைக்கு சென்றபோது பாபுவும், கஸ்தூரியும் நண்பர்களாகியுள்ளனர். நாளடைவில் நட்பு காதலாகி இருவரும் நெருங்கிப் பழகினர். இதையடுத்து கஸ்தூரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு பாபுவை வற்புறுத்தி வந்தார். இதற்கிடையே கடந்த 20 நாட்களுக்கு முன்பு கஸ்தூரி வேலைக்கு வருவதை நிறுத்திவிட்டார்.

இந்நிலையில் கடந்த 8ம் தேதி முதல் அவரை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால் கூடல் நகர் போலீசில் அவரது பெற்றோர் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கஸ்தூரியின் கைப்பையை சோதித்தபோது அதில் பாபு என்ற பெயரில் நகை அடகு வைத்த ரசீது இருந்தது. அதைக் கைப்பற்றி பாபுவைத் தேட ஆரம்பித்தனர். இதையறிந்த பாபு சீமானூத்து நிர்வாக அலுவலர் பால்பாண்டியிடம் சரண் அடைந்தார். பின்னர் அவர் உசிலம்பட்டி டவுன் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

விசாரணையில் தெரிய வந்த விபரம் வருமாறு,

பாபு கஸ்தூரியுடன் பல முறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். கஸ்தூரி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தவே பாபு அவரைவிட்டு விலகத் தொடங்கினார். இந்த விவகாரம் யாருக்கும் தெரியாமல் இருக்க கஸ்தூரியை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். கடந்த 8ம் தேதி தான் மட்டும் வீட்டில் இருந்தபோது கஸ்தூரியை வீட்டுக்கு வரவழைத்துள்ளார். அங்கு அவர் கஸ்தூரியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அநத பெண்ணை கழுத்தை நெறி்ததுக் கொன்று வீட்டுக்கு முன்பு உள்ள காலி இடத்தில் புதைத்துள்ளார். இவ்வளவும் செய்துவிட்டு எதுவும் நடக்காதது போன்று இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழ்ககுப் பதிவு செய்து பாபுவை கைது செய்தனர். இன்று தாசில்தார் ராஜேந்திரன் முன்னிலையில் கஸ்தூரியின் உடலைத் தோண்டி எடு்தது பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.Source:http://tamil.oneindia.in

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator