Saturday, April 21, 2012

தளபதி சரத் பொன்சேக்கா எதிர்வரும் மே மாதம் விடுதலை செய்யப்படடலாம்?

அரசியல் காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எதிர்வரும் மே மாதம் விடுதலை செய்யப்படடலாம் என அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதிக்கும் டிரான் அலஸூக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் பலனாக பொன்சேக்கா விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தொடர்ந்தும் அமுலில் உள்ள போதும், அவர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தொடர்ந்தும் அமுலில் உள்ள போதும், அவர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இதனால் அவர் பிணை கோரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
சரத் பொன்சேகா நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் - சஜித்
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா எவ்வித நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் சேவைகளை பாராட்டுவதனைப் போன்றே, சரத் பொன்சேகாவின் சேவைகளும் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டியவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்த காலத்தில் சரத் பொன்சேகா ஆற்றிய சேவை அளப்பரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.ரணசிங்க பிரேமதாசவைப் போன்றே, சரத் பொன்சேகாவையும் எவராலும் சுலபமாக மறந்து விட முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வரும் சரத் பொன்சேகாவை சஜித் பிரேமதாச, கருஜயசூரிய மற்றும் சுஜீவ சேனசிங்க ஆகிய ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பார்வையிட்டுள்ளனர். சரத் பொன்சேகாவை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கோரும் வாய்ப்புகள் இருப்பதாக அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
source: http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/76451/language/ta-IN/article.aspx

No comments:

Post a Comment

voiceofmannar.com

Voice of Mannar

↑ Grab this Headline Animator